காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மீதான விமர்சனத்தில், பிரதமர் நரேந்திரமோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறவில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

மக்களவைத் தேர்தலையொட்டி மகாராஷ்ட்ரா மாநிலம் வார்தாவில் நடைபெற்ற பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி சிறுபான் மையின மக்கள் அதிக முள்ளதால் சிலதலைவர்கள் கேரள மாநிலம் வயநாட்டில் போட்டி யிடுவதாக, தாக்கிபேசினார். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் கட்சி புகார் அளித்தது.

அதில் பிரதமர் மோடியின் பேச்சு, மக்களிடையே பிரிவினையை தூண்டும்விதமாக உள்ளது என குறிப்பிட்டிருந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணையம் மகாராஷ்ட்ரா மாநில தேர்தல் ஆணையம் அனுப்பிய விரிவான அறிக்கையை ஆராய்ந்த தாகவும், அதில் தேர்தல் நடத்தைவிதிகளை மீறி பிரதமர் மோடி பேசவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply