பல்வேறு சிக்கல்களை சந்தித்து வந்த நர்மதா அணையின் கட்டுமானப்பணிகள் முழுமையடைந்த நிலையில் பிரதமர் நரேந்திரமோடி 67-வது பிறந்த நாளின் போது நர்மதா அணையை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

முன்னதாக நர்மதா மாவட்டத்தில் உள்ள ஒருபூஜை நடத்திய பிறகு, பிரதமர் நரேந்திர மோடி கோலாகலமான நிகழ்ச்சியொன்றில் நர்மதா அணையை நாட்டுக்கு அர்ப்ப ணித்தார். இவ்விழாவில் உடன் மத்திய அமைச்சர் நிதின்கட்காரி, குஜராத் முதல்வர் விஜய் ரூபானி உள்ளிட்ட பல பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.

முன்னதாக இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்ட பிரதமர் குஜராத்திற்கு செழிப்புமிக்க ஒருபுதிய அத்தியாயத்தை இத்திட்டம் தொடங்கும் என்று வலியுறுத்தினார்.

"குஜராத்தின் உயிர்நாடி" என வர்ணிக்கப்படும் நர்மதா அணையின் நீர்ப் பாசனத்தால் மாநிலத்தில் விவசாயிகளால் விவசாயவருவாய் மற்றும் உற்பத்தி இரட்டிப்பாகும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

நர்மதா நதியின் மீது கட்டப்பட்டுள்ள இந்த அணை 'குஜராத்தின் உயிர்நாடி' என பாஜக தலைவர்கள் வர்ணிக்கின்றனர். 1961 ஏப்ரல் 5 ம் தேதி நாட்டின் முதல்பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அணைக்கு அடித்தளம் அமைக்கப்பட்டது. அடிக்கல் நாட்டி 56 ஆண்டுகளாக அணை கட்டும் பணிநடைபெற்றது. இடையில் சில ஆண்டுகாலம் அணையின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

மேதா பட்கர் தலைமையிலான நர்மதாபச்சோ ஆந்தோலன் இயக்கம் சுற்றுச்சூழல் மற்றும் அணை கட்டுமானத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு பிரச்சினைகளுக்காக போராடியது. அதைத்தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் அணையைக் கட்ட 1996ல் தடை உத்தரவும் பெற்றனர். பின்னர் 2000 அக்டோபரில் உச்சநீதிமன்றம் நிறுத்தப்பட்ட அணையின் பணிகள் மீண்டும் தொடர அனுமதி அளித்தது.

அணையின் உயரம் 138.68 மீட்டர் உயர்த்தப்பட்டது, இது 4.73 மில்லியன் ஏக்கர் பாசனத்திற்கு தண்ணீரின் அதிகபட்ச 'பொருந்தக்கூடிய சேமிப்பு' ஆகும்.

Leave a Reply