பிரதமர் மோடி 5 நாள் சுற்றுப் பயணமாக இந்தோனேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்!

இதன் முதல்பகுதியாக நேற்று முன்தினம் அவர் இந்தோனேசியா சென்றார். அங்கு அவர் அந்நாட்டின் அதிபர் ஜோகோ விடோடோவை தலை நகர் ஜகார்த்தாவில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது இருநாட்டு தலைவர்களும் முறைப்படி வர்த்தகம், முதலீடு மற்றும் கடற்பாதுகாப்பு உள்ளிட்டவற்றில் இரு தரப்பு ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். 

இதன் பின்னர், இந்தோனேஷியாவின் ஜகர்தா நகரில் விடுதலைக்கு போராடி உயிர்பிரிந்த கலிபாட்டா தேசிய வீரர்களுக்கான கல்லறைக்கும் பிரதமர் மோடி சென்று அஞ்சலி செலுத்தினார். இதையடுத்து, ராணுவம், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் ஒத்துழைத்து செயல்படுவது பற்றி விரிவான பேச்சு வார்த்தையில், பின்னர் இது தொடர்பான பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாயின.

இந்த நிலையில், இந்தோனேசியா பயணத்தை நிறைவுசெய்த பிரதமர் மோடி, மலேசியா புறப்பட்டுச் சென்றார். தலைநகர் கோலாலம்பூர் சென்றுள்ள மோடி, அண்மையில் மலேசிய பிரதமராக தேர்வுசெயய்பட்ட மஹதீர் முகம்மதுவை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதையடுத்து, வருகிற 1-ஆம் நாள் சிங்கப்பூர் செல்கிறார் என்பது குறிபிடத்தக்கது.

Leave a Reply