பலுசிஸ்தானில் அரங்கேறிவரும் மனித உரிமைமீறல் குறித்து குரல்கொடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு, அப்பகுதி மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது.  பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியகொடியை கையில் ஏந்தியபடி அவர்கள் போராட்டத்திலும் குதித்துள்ளனர்.

பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானில் பலூச்தேசிய இயக்கம், பாகிஸ்தானிடமிருந்து விடுதலைகோரி தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சுதந்திரதின உரையில், பிரதமர் நரேந்திரமோடி, பலுசிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அரங்கேற்றப்பட்டுவரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கேள்வி எழுப்பினார். 

பலுசிஸ்தான் மக்களுக்கு இந்தியா ஆதரவாக இருக்கும் என்றும் மோடி அப்போது உறுதியளித்தார்.  பிரதமர் மோடியின்பேச்சை பலூச் தேசியஇயக்கம் வரவேற்றுள்ளது. கடந்த நான்கு நாட்களாக பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அவர்கள், இந்தியகொடியுடனும், பிரதமர் மோடியின் புகைப்படத்துடனும் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிவருகின்றனர். இது பாகிஸ்தானுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. 

Leave a Reply