பிரதமர் நரேந்திர மோடியின் ராக்கிசகோதரி ஸ்ரபதி தேவி 103 வயதில் காலமானார்.

2017ஆம் ஆண்டு ஆகஸ்ட்மாதம் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்ரபதிதேவி என்ற மூதாட்டி ராக்கி கட்டினார்.

50 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல்போன தன் சகோதரர் நினைவாக பிரதமருக்கு ராக்கிகட்ட வேண்டும் என்று அவர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனையடுத்து, மோடியின் அழைப்பை ஏற்று ரக்ஷாபந்தன் நாளில் பிரதமர் இல்லத்திற்கு சென்ற ஸ்ரபதி தேவி பிரதமருக்கு ராக்கிகட்டினார்.

103 வயதான ஸ்ரபதி ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் மரணம் அடைந்தார். இன்று மாலை அவரது இறுதிச்சடங்கு நடக்கிறது.

Leave a Reply