பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கருக்கு ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு கொலைமிரட்டல் விடுத்துள்ளனது.

கோவா மாநில தலைமை செயலகத்திற்கு தபாலில் கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதில், ''பசுவதை தடுப்பு சட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க் கிறோம். இதற்காக பிரதமர் நரேந்திர மோடியையும், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கரையும் கொலைசெய்வோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்தகடிதத்தின் அடியில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.

இந்தகடிதம் குறித்து வழக்கு பதிவுசெய்துள்ள கோவா மாநில காவல் துறையினர், வழக்கு விசாரணையை தீவிரவாத தடுப்புபிரிவினரிடம் ஒப்படைத்துள்ளனர். மேலும், இந்தகடிதத்தின் நகலை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி, எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர்

Leave a Reply