மத்திய பாஜக அரசுக்கு எதிராக ஒரு சில முக்கிய எதிர்கட்சிகளும், தேச விரோத அமைப்புகளும் நேரடியாகவும், மறைமுகமாகவும் கைக்கோற்கும் .இந்த நேரத்தில் ப்ளூம்பெர்க் செய்தி நிறுவன முக்கியமான ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்வில் ஒவ்வொரு நாட்டின் தற்போது அதிபர்கள் இன்னும் எத்தனைவருடங்கள் அதிபர்களாகவும், பிரதமராகவும் இருப்பார்கள் என பட்டியலிட்டுள்ளது.

உலக நாடுகளில் ஒரு நாட்டின் ஆதிக்கத்தைப் பொருளாதார வளர்ச்சி மற்றும் ராணுவ அதிகாரத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. இதன்படி அமெரிக்கா முதல் இடத்திலும் சீனா 2வது இடத்திலும் உள்ளது. நீண்ட கால அடிப்படையில் நாட்டின் வளர்ச்சியை, காலநிலை மாற்றம், வறுமை மற்றும் பிறநாடுகளுடனான நட்புறவை வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது. இப்படி ஒவ்வொரு நாட்டின் வளர்ச்சி மற்றும் நாட்டுத்தலைவர்கள் பதிவி நிலைத்திருக்கும் கால அளவீட்டின் கணிப்பையே ப்ளூம்பெர்க் வெளியிட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2019இல் நடக்கும் பொதுத் தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெறுவார். அதாவது 130 கோடி மக்களின் பிரதிநிதியாக மேலும் 5 ஆண்டுகள் தொடர்வார்.  மேலவையில் மோதுமான பெரும்பான்மை இல்லாததால் மிக முக்கியமான சீர்திருத்த மசோதாக்களை கொண்டு வர முடியவில்லை. 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றதில் இருந்து பெரும் பன்மையான மாநிலங்களில் பாஜக., ஆட்சி அமைத்துள்ளது.  இவரது பொருளாதார சீர் திருத்தங்கள் மக்களுக்கு சிரமங்களை தந்த போதிலும், அந்த திட்டங்கள் மக்களிடம் பிரபலமாகவே உள்ளது. 

எதிர்க்கட்சியில் பிரபலமான தலைவர்கள் இல்லை, இருப்பினும் பிராந்திய கட்சிகள் முக்கிய போட்டியாக உள்ளன. இருப்பினும் மோடி தலைமையிலான ஆட்சி இந்தியாவில் 2024ஆம் ஆண்டுவரையில் தொடரும் எனவு இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

சவுதி அரேபிய இளவரசர் முகமத்பின் சல்மான் இந்நாட்டின் தேவையற்ற மரபுகளை நீக்கிவிட்டு அடுத்த தலை முறைக்கான நாட்டை உருவாக்கும் பணியில் மூழ்கியுள்ளார். இவரது பலமுடிவுகளுக்கு அந்நாட்டு மக்கள் தொடர்ந்து ஆதரவுதெரிவித்து வருகின்றனர். இவரது தந்தைக்குத் தற்போது 82 வயது, முந்தைய அரசர் அப்துல்லா இறக்கும்போது அவருக்கு 90 வயது. இந்நிலையில் தற்போது 32 வயதாகும் முகமத்பின் சல்மான் இன்னும் 50 வருடங்களுக்கு இங்கு ஆட்சிசெய்வார் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

 

வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் அமெரிக்கா மற்றும் தென்கொரியா உடன் தொடர்ந்து போர் உருவாக்கும் வகையிலேயே பேசி வருகிறார். இவரதுதந்தை கிம் ஜாங் 2 இறக்கும் போது 70வயது. இந்நிலையில் 30களில் இருக்கும் கிம் ஜாங் உன் குறைந்தபட்சம் 40 வருடம்வரையில் ஆட்சி செய்வார் எனத் தெரிகிறது.

ஜி ஜிங்பிங் சீன அதிபரின் பதவி காலத்தை ஆதிக்கம் நிறைந்த சீனகம்யூனிஸ்ட் கட்சி பிப்ரவரியில் மாற்றியுள்ள நிலையில், 64வயதாகும் ஜி ஜிங்பிங் குறைந்த பட்சம் 2023 வரையில் அதிபராக நீடிப்பார் எனத்தெரிகிறது.

விளாடிமிர் புதின் விளாடிமிர் புதின் 18 வருடமாக ரஷ்யாவை ஆட்சிசெய்து வரும் விளாடிமிர் புதின் மீண்டும் அதிபர் தேர்தலில் 77 சதவீத வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றுள்ளார். இதனால் அடுத்த 6 வருடத்திற்கு அதாவது 2024 வரையில் புதின் அதிபராக இருப்பார்.

ரெசெப் தயிப் எர்டோகன் துருக்கி நாட்டில் நவம்பர் 2019இல் அதிபர்தேர்தல் நடைபெற உள்ளது. உலகளவிலும், துருக்கி அரசு அமைப்பிலும் மிகவும் சக்திவாய்ந்த தலைவராக இருக்கும் தற்போதைய அதிபர் ரெசெப் தயிப் எர்டோகன் மீண்டும் அதிபராகத் தேர்வுசெய்ய அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.

 

Leave a Reply