‘மத்திய அரசின் நலத் திட்டங்களால் நாட்டில் ஏழை, நடுத்தரமக்களின் வாழ்க்கை சுமை குறைந்து எளிதாகி உள்ளதை நாடுமுழுவதும் எடுத்துச் சொல்லுங்கள்’’ என்று அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் மோடி தலைமையில் கடந்த வெள்ளிக் கிழமை அமைச்சரவை கூட்டம் நடந்தது. அதன்பின் தனியாக அமைச் சர்களின் கவுன்சில் கூட்டம் நடந்தது. இந்தக்கூட்டத்தில் மோடி உரையாற்றினார்.

பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி ஆகியவற்றை எதிர்க் கட்சியினர் தொடர்ந்து எதிர்த்துவருகின்றனர். இதை சமாளிக்க மத்திய அரசின் நலத் திட்டங்களால் நாட்டில் ஏழை, எளியமக்களின் சுமை குறைந்து எளிதாகி உள்ளதாகவும், அதுபோன்ற திட்டங்களை நாடுமுழுவதும் நல்லவிதமாக அமைச்சர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

குறிப்பாக உலக ளவில் வர்த்தகம் தொடங்கவும், முதலீடுசெய்யவும் உகந்த சூழல் உள்ள நாடுகளின் பட்டியலை உலகவங்கி சமீபத்தில் வெளியிட்டது.

அதில், 30 இடங்கள் முன்னேறி முதல் 100 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இதனாலும் மக்களின் வாழ்க்கைதரம் முன்னேறி உள்ளதை எடுத்துரைக்க வேண்டும் என்று அமைச்சர்களை மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் கூட்டம் நேற்றுமுன்தினம் குவாஹாட்டியில் நடந்தது. கூட்டத்துக்குப் பின்னர் பேசும்போது, “ 28 சதவீத ஜி.எஸ்.டி வரிவிதிப்பு பிரிவில் இருந்து 178 பொருள்கள் நீக்கப்பட்டு அவற்றுக்கு 18 சதவீதவரி விதிக்கப்படும் என கவுன்சிலின் தலைவரும் மத்திய நிதியமைச் சருமான அருண் ஜேட்லி அறிவித்தார். உயர் அளவு 28 சத ஜிஎஸ்டி பிரிவில் 50 பொருள்கள் மட்டுமே இருக்கும். நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்பிரிவில் வராத அனைத்து ஓட்டல் களுக்கும் வரி 5 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் ஜேட்லி அறிவித்தார்.

இது குறித்து பிரதமர் நரேந்திரமோடி தனது ட்விட்டரில் கூறியதாவது:ஜி.எஸ்.டி கவுன்சில் பரிந்துரைகளால் நாட்டுமக்களுக்கு பலன் கிடைக்கும். அத்துடன் வரிவிதிப்பு முறையில் கூடுதல் பலம் ஏற்படும். எங்களுடைய எல்லா முடிவுகளும் மக்களுக்கு பலனளிக்கும் வகையில் எடுக்கப் படுகின்றன. இவ்வாறு பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Tags:

Leave a Reply