தில்லியில் அம்மணக்கட்டையா போராடுபவரை, "பொம்பளை மாதிரி சேலையை கட்டிட்டு போனாதான் மோடி பாப்பாரு"னு பொறுக்கித்தனம் செய்பவனை "அப்பாவி விவசாயி"  என்பது ஒரு வாய் !!   அதே ரீதியில் கர்நாடகாவின் மாண்டியாவில் "காவேரி தண்ணியை விடாதீங்கடா"னு ரவுடித்தனம் செய்யும் விவசாயியை  'கன்னட வெறியன்னு' பேசுவது வேறு வாய் !!  

 

"ஜல்லிக்கட்டு நடக்காம நாட்டு மாடுங்க அழியுதுங்க,  விவசாயம் அழியுதுனு" கூவுவ‌து ஒரு வாய் !!   அதே மாடுகளை பாதுகாக்க சில வழிமுறைகளை முன் வைத்தால் "மாட்டிறைச்சி எங்க வாழ்வாதாரம்,  உழைப்பாளர்களின் உணவு" என்ரு கூவுவது வேறு வாய் !!

 

மோடி கருப்பு பணத்திற்கு எதிரா என்ன கிழிச்சாறு ?" னு கேட்டது ஒரு வாய் !!  அதே மோடி சாட்டைவாரை எடுத்து சுழட்டுனதும் "ஐயோ பொதுமக்கள் இப்படி வரிசைல நிக்கறாங்களே,  மோடியோட அராஜகம் தாங்க முடியலையே"னு புலம்புவது வேறு வாய் !!  

 

வருமான வரித்துறை ரெய்டு மேல் ரெய்டு நடத்துனா "ஐயோ அரசியல் காழ்ப்புணர்வோட இப்படி ரெய்டு நடத்தறாங்களே ?இதெல்லாம் அரசியல் பழிவாங்கல்" நு பொலம்பறது ஒரு வாய் !!   அதே வருமான வரித்துறை,  சில பாஜக பிரமுகர்கள் மீதும் நியாயமான முறையில் ரெய்டு நடத்தினால்,  "பார்த்தீர்களா பாஜககாரன் எப்படி சிக்கியிருக்கான்" என்று பேசுவது வேறு வாய்.  அதே வருமான வரித்துறை கோகுலம் சிட்ஃபண்டு முதல் பல நிறுவனங்கள் மீது ரெய்டுகள் நடத்தும் போது கண்டு கொள்ளாமல் வேறு எதை குறித்தாவது பேசுவது மற்றொரு வாய்.

 

பாஜகவுக்கு சாதகமாக தீர்ப்பு வந்தால் "நீதித்துறையை பாஜக ஆளுமை செய்கிறது"  என்பது ஒரு வாய் !!   அதே நீதித்துறை பாஜகவுக்கு எதிராக தீர்ப்பு தந்தால் (உதாரணம்  ஆதார் கட்டாயம் இல்லை தீர்ப்பு)  "பாஜகவுக்கு சரியான சவுக்கடி"  என்று பேசுவது வேறொறு வாய் !!

 

வளர்ச்சி குறித்து மோடி பேசினால்,  "தன் மதவாத முகத்தை மறைத்து கொள்ள வளர்ச்சியை குறித்து பேசுகிறார்" என்பது ஒரு வாய்.  அதே மோடி  இந்திய கலாச்சாரத்தை புகழ்ந்து பேசினால்  "பார்த்தாயா மதவாத முகத்தை அவர் காட்டுகிறார் ?" என்பது வேறு வாய் !!

 

தமிழ் மீனவர்கள் இலங்கை அரசால் சுடப்பட்டால் "மோடி இதை ஏன் கண்டு கொள்ளவில்லை ?" என்று கேட்பது ஒரு வாய்.  அதே மோடி இலங்கை சென்று தமிழ் மீனவர்கள் பாதுகாப்பு குறித்து பேசினாலோ,  இலங்கை தமிழர் நல்வாழ்வுக்காக‌ வீடு கட்டி தர ஏற்பாடு செய்தாலோ "தமிழர்களின் ஓட்டுக்காக நடத்தப்படும் நாடகம்" என்று சொல்வது வேறு வாய் !!

 

"சமஸ்க்ருதம் படிக்க விடாமல் பிராமணர்கள் மற்றவர்களை ஒதுக்கி விட்டார்கள்.  யாருக்கும் எதையும் சொல்லித்தராமல் மறைத்து விட்டனர்"  என்பது ஒரு வாய்.  அதே சமஸ்க்ருதத்தை அனைவரும் பயில வேண்டும் என்று கல்வி சாலைகளில் கொண்டு வந்தால் "தமிழை அழிப்பதற்கு சமஸ்க்ருதத்தை திணிக்கிறார்கள்" என்பது வேறு வாய்.  

 

"தமிழ் கலாச்சாரம் வேறு,  பாரத கலாச்சாரம் வேறு" என்று ஆதாரம் இல்லாமல் பேசுவது ஒரு வாய்.  "அம்மா அப்பாவை "மம்மி, டாடி" என்றும்  அத்தை மாமாவை "ஆண்ட்டி,  அங்கிள்"  என்றும்,  அண்ணன் தம்பியை "ப்ரோ"  என்று சுத்தமான செந்தமிழில் விளிப்பது வேறு வாய் !!

 

இப்படி பல "நல்ல வாய்கள்",  "நாற வாய்கள்" என‌ திரிகிறார்கள் தேச விரோதிகள்.   உங்கள் மனதுக்கு பட்ட நல்லவாய் நாறவாய் கருத்துக்களை முன் வையுங்களேன் ?

Leave a Reply