ரூபாய் நோட்டு வாபஸ்திட்டம் அறிவிக்கப்பட்ட நவம்பர் 8ம் தேதியை நாடுமுழுவதும் கறுப்புபணம் எதிர்ப்பு தினமாக கொண்டாட முடிவு செய்யப் பட்டுள்ளதாக மத்திய நிதிய மைச்சர் அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

 

டில்லியில் நிருபர்களை சந்தித்தவர் கூறியதாவது: வரும் நவம்பர் 8 ம் தேதியை நாடுமுழுவதும் கறுப்புபணம் எதிர்ப்பு தினமாக பா.ஜ., கொண்டாடும். கறுப்புபணத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சி ஒரு நடவடிக்கைகூட எடுத்தது கிடையாது. அக்கட்சி பலமுறை ஆட்சியில் இருந்த போதும், கறுப்பு பணத்திற்கு எதிராக ஏதாவது ஒருநடவடிக்கை எடுத்ததாக எனக்கு நினைவில் இல்லை. அக்கட்சி தலைவர்கள் சுய நலம் காரணமாக ரொக்கபொருளாதாரத்தை ஆதரிக்கின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் திட்டத்தின் முக்கியத்துவத்தை காங்கிரசார் புரிந்துகொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply