நாஞ்சில் சம்பத் நாவடக்கம் கொள்ள வேண்டும், பணத்துக்கும், பதவிக்கும், ஆட்சிக்குமான பங்காளிச் சண்டையில் தினகரனின் அல்லக்கையாக இ.பி.எஸ்., ஒ.பி.எஸ்.,சை எல்லாம் தரம் தாழ்ந்து விமர்சித்து வந்தவர். பணப் பித்து முத்தி பாஜக.,வையும், அதன் மாநிலத் தலைவரையும் பெண் என்றும் பாராமல் தரம் தாழ்ந்து விமர்சித்த செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

கூலிக்கு மாரடித்தாலும் அதற்க்கும் ஒரு எல்லை உண்டு என்ற நிதானம் கொள்ளவேண்டும், மாற்று சித்தாந்தங்கள் கொண்டவர்கள் கூட அவரது இலக்கிய தமிழால் ஈர்க்கப்பட்டது உண்டு. ஆனால் இன்று கோடிகளில் அலங்கரிக்கப்பட்ட நடை பிணங்களின் மத்தியில் வாழ்வதால் என்னவோ நாலாந்தர பேச்சாளராக இன்று உருவகம் பெற்றுவிட்டார்.

அவரது இலக்கிய பேச்சை ரசித்தவர்கள், இன்று தொலைகாட்சி பேட்டிகளைப் பார்த்து சிரித்துக் கொண்டிருக் கிறார்கள். ஜெயலலிதா மறைவுக்கு பின், ஜெயலலிதாவை அம்மா என்று புகழ்ந்த என் நாக்கு சசிகலவுக்காக புரளாது. தவிடு நெல் ஆகாது, வான்கோழி மயிலாகாது, கறந்த பால் மடி புகாது என்றெல்லாம் டயலாக் விட்டார். ஜெயலலிதா தந்த இன்னோவா வாகனத்தை திருப்பி தந்தார். ஆனால் நான்காம் நாளே தவிடு நெல் ஆனது, கறந்த பால் மடி புகுந்தது, சின்னம்மா பெரியம்மா ஆனார்.

ஆம் பெரிய சன்மானத்தை பெற்றதன் அடையாளமாக. ஜெயலலிதாவுக்காக  புரண்ட அவரது நாக்கு சசிகலா, தினகரனின் புகழை பாட சுழன்றது, டிடிவி தினகரன், காலம் தந்த தலைவன்; திராவிட இயக்கத்தைப் பாதுகாப்பவர் என்றெல்லாம் இன்று வரை ஓரவாக சுழன்று கொண்டிருக்கிறது. தினகரனை புகழ்வதற்காக மக்கள் காறி உமிழ்ந்தால் துடைத்துக் கொள்வேன் என பேட்டியும் அளித்தாகி விட்டது.

இப்படி தரம் தாழ்ந்து பணப் போதையில் நிதானம் இழந்து விட்ட சம்பத்துக்கு பாஜக தொண்டர்கள், முற்றுகை போரட்டங்களின் மூலமும்,  வழக்குகளின் மூலமும் சரியான பதிலடியை தந்துள்ளனர். நாக்கு எத்திசையும் புரளும் 'காசேதான் கடவுளப்பா'  என்ற எண்ணம் படைத்த சம்பத்துக்களுக்கு இது ஒன்றே சரியான சம்பட்டி அடி.

தமிழ்த் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply