இன்று தமிழகத்தில் வேண்டுமென்றே தங்கள் சுய லாபத்திற்காக பல கட்சிகள், எந்த கட்சிகள் தங்கள் கையில் ஆட்சி அதிகாரமும், ஆட்சியில் கூட்டணி என்ற துருப்புச் சீட்டை கையில் இருந்தும் அதை காவிரியைக் கொண்டு வருவதற்கு எந்த முயற்சியையும் செய்யாமல், ஆனால் இன்று நாடகம் ஆடுவது மட்டுமே தனது கடமை என்ற நிலையில் போய்க்கொண்டிருக்கிறது,

காவிரித் தண்ணீர் கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமில்லை, காவிரிக்காக போராடுகிறோம் என்ற பெயர் வந்தால் போதும், காவிரித் தண்ணீர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? எங்கள் பெயர் காப்பாற்றப்பட்டுள்ளது அங்கே போராட்டம், இங்கே போராட்டம், கடையடைப்பு, ரயில் மறியல் என்று போராட்டம் நடத்தப்பட்டால் போதுமானது என்ற ரீதியில் தமிழகத்தில் உள்ள கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை மக்கள் உணர வேண்டும்.

காவிரிக்காக இவ்வளவு பேசும் திமுக 74 ல் ஏன் காவிரி உரிமைக்காக தமிழகம் உச்ச நீதி மன்றத்தில் போட்ட வழக்கை வாபஸ் வாங்கியது? 24 ல் இருந்து 74 வரை 50 ஆண்டு காலம் குழப்பமில்லாமல் நீர் பங்கிடப்பட்டு வந்தது. முதல் குழப்பத்தை ஏற்படுத்தியது திமுக.

இன்று கூட தெளிவாக உச்சநீதி மன்றம் “Scheme” என்று தான் சொன்னோம் என்கிறது. இதைத்தான் நாங்கள் சொல்கிறோம். ஆணையம் அமைத்து விட்டுப் போக வேண்டியது தானே என்கிறார்கள். ஆணையம் என்றல் அணைத்து மாநிலங்களும் அணைகள் மீது உள்ள தங்களது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும். அணையின் உரிமை, பராமரிப்பு எல்லாமே ஆணையத்திடம் சென்று விடும். மாநிலங்கள் அதற்க்கு உரிமை கொண்டாட முடியாது, ஆக அப்படி ஓர் முடிவை அறிவிக்க வேண்டுமென்றால் மத்திய அரசு தன்னிச்சையாக அதை அறிவிக்க முடியாது, மாநிலங்கள் தான் அணை உரிமையை  ஓர் அமைப்பிடம் அளிக்க வேண்டுமென்றால் அதற்க்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் வேண்டும். அதை தான் உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தெளிவாகச் சொன்னது, அதனால் தான் உச்சநீதி மன்றம் ஆணையம் அமைக்க மத்திய அரசை வற்புறுத்தவில்லை.

இப்போது “Scheme” அதாவது வழிகாட்டுக்குழு என்று தான் சொன்னோம் என்கிறார்கள். “Scheme” என்றல் தண்ணீர்ப் பிரித்துக் கொடுக்கும் உரிமை அந்த குழுவிடம் இருக்கும் ஆனால் அணைகளின் உரிமை மாநிலங்களிடம் இருக்கும். இது தெரியாமல், புரியாமல் ஆணையம் அமைக்க வேண்டியதுதானே! ஒரு  மணி நேரத்தில் அமைத்து விடலாம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் பொதுமக்களுக்கு வைக்கும் வேண்டுகோள்:

திமுக உட்பட அத்தனைக் கட்சிகளும் மக்களை ஏமாற்றுகிறார்கள், போராட்டங்கள், மக்களுக்கான இடையூறுகள் என்றும் தீர்வாகாது, மத்திய அரசு தங்கள் கடமையையும், நிலைப்பாட்டையும் தெளிவாக உணர்ந்திருக்கிறது, அதனால் தான் இதற்கு முந்தைய காலக்கட்டங்கள் போல் இல்லாமல் ஓர் நிரந்தர தீர்வு வர வேண்டும் என்பதற்காகத் தான் இன்று தெளிவுப்படுத்த கோரியும், கால அவகாசம் கேட்டும் மனு செய்திருக்கிறார்கள்.

கர்நாடக 1989 ல் இருந்து தொடர்ச்சியாக இதுவரை ஒரே சட்ட வல்லுநர் திரு. நாரிமன் தலைமையில் மட்டுமே சட்ட ரீதியாக அணுகிக் கொண்டிருக்கிறது, அதனாலேயே அது பல சாதகங்களை பெற்றுக் கொள்கிறது

ஆனால் தமிழகத்தை ஆண்ட காட்சிகள் மாறி மாறி சட்ட வல்லுனரை மாற்றியதால் நாம் இப்பிரச்னையில் கிடைக்க வேண்டிய தண்ணீர் அளவையும் இழந்திருக்கிறோம். இதற்கும் 5 முறை ஆட்சியில் இருந்த திமுகவும் காரணம்.

ஆக 18 ஆண்டுகள் மத்திய அமைச்சகத்தில் இடம் பெற்று இருந்த திமுக நினைத்திருந்தால் காவிரியின் உரிமையை மீட்டெடுத்திருக்க முடியாதா?

5 முறை தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்த பொது காவிரியின் உரிமையை மீட்டெடுத்திருக்க முடியாதா?

திரு. எம்ஜிஆர் கொடுத்த ஊழல் பட்டியலை வைத்து தன்மீது இந்திரா காந்தி நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று உச்சநீதி மன்ற வழக்கை கலைஞர் ஆட்சியில் வாபஸ் வாங்காமல் இருந்திருந்தால் காவிரியை  மீட்டெடுத்திருக்க முடியும்.

ஆக தன்கையில் ஆட்சி அதிகாரம் இருக்கும் பொது காவிரியின் உரிமையை மீட்டெடுக்காமல் இன்று காவிரி உரிமை மீட்போம் என்று யாத்திரை செல்வது பொய்யானது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

அதுமட்டுமல்ல “Scheme” என்பதற்கு விளக்கம் கேட்பது வாழ் உரிமையோடு விளையாடுவது என்கிறார் ஸ்டாலின், விளக்கம் கேட்பதே வாழ் உரிமையோடு விளையாடுவது என்றல் அதை அமைக்க விடாமல் தடுக்கும் கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸோடும், கேரளாவில் ஆளும் கம்யூனிஸ்டுகளோடும் கைகோர்த்துக் கொண்டிருக்கிறீர்களே இது என்ன பொய் வாழ் உரிமை போராட்டமா?

காவிரி ஆணையமோ, குழுவோ அது 4 மாநிலம் சம்மந்தப்பட்டது ஆக தங்கள் கூட்டணியை வைத்து தமிழக உரிமைக்கு எதிரான நடவடிக்கை மேற்கொண்டு இங்கு காவிரியை மீட்கிறோம் என்று கபட நாடகம் ஆடுபவர்கள் பொய் முகத்திரை கிழியும். மத்திய அரசின் முயற்சியில் காவிரி பாயும்…

ஆம் பல்லாண்டுகாலமாக ஆண்ட காங்கிரஸ் கட்சியால் மறுக்கப்பட்ட காவிரி உரிமை UPA 1 ல் கம்யூனிஸ்டுகளின் துணையோடு தான் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்தது, அப்போது அழுத்தம் கொடுக்காமல் அதே கம்யூனிஸ்டுகளால் கொண்டு வராமல் மறுக்கப்பட்ட காவிரி உரிமை.

கூட்டணி ஆட்சியில் இருந்தும் காவிரி கொண்டுவர எந்த அழுத்தமும் கொண்டுவராத திமுக வால் மறுக்கப்பட்ட காவிரி உரிமை, பாராளுமன்ற பதவிகள் தங்கள் கையில் இருந்தாலும் அதை பயன் படுத்தி அன்றே காவிரி பிரச்னையை பற்றி எதுவும் பேசாத, கொண்டுவர முயற்சி எடுக்காத அன்றைய பாராளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், வைகோ, அன்புமணி போன்றவர்களால் மறக்கப்பட்ட காவிரி உரிமை மத்திய அரசின் தெளிவான முயற்சியால் நிரந்தர தீர்ப்பை கொண்டு வரும்நாளில் மத்திய மோடி அரசு ஜல்லிக்கட்டிற்கு நிரந்தர தீர்வு கண்டதை போல, வரும்நாட்களில் தமிழகத்தில்  காவிரியும் நிரந்தரமாக பாய்ந்தோட வழிவகைகளை காணும் என்பது உறுதி.

ஆக சட்ட ரீதியாக கிடைத்த தீர்ப்பை இரு மாநில மக்களின் நல்லெண்ண உறவு பாலத்தின் வழியாக தான் மத்திய அரசு தீர்க்க முடியும் என்பது எதார்த்தம். 40 ஆண்டு காலமாக இவர்களால் கிடப்பில் போடப்பட்ட காவிரி பிரச்சனை மேலும் சில நாட்கள் அவகாசம் கிடைப்பதன் மூலமே ஒரு நிரந்தர தீர்வு ஏற்படுத்த முடியும் என பாஜக அரசு எண்ணி செயல்படுகிறது என்பதை தமிழக மக்கள் உணர்வார்கள்.

டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்

தமிழக பாஜக தலைவர்

Leave a Reply