நாடுமுழுவதும் 10 ஆயிரம் மருத்துவ சீட் அதிகரிக்கப்பட உள்ளதாக கோவையில் நடந்த இஎஸ்ஐ மருத்துவ மனை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

தொழிலாளர்களின் நலனை கருத்தில்கொண்டு வருங்கால வைப்பு நிதி (இபிஎப்) மற்றும் தொழிலாளர் அரசு காப்பீட்டு கழகம் (இஎஸ்ஐ) ஆகியவற்றை ஒருங்கிணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. இபிஎப் கணக்கு எண் வைத்துள்ள தொழிலாளர்களின் பயனுக்காக, தொழிலாளர் நலசட்டத்தில் புதிய திருத்தம் செய்யப்பட உள்ளது.  இஎஸ்ஐ மற்றும் இபிஎப் போன்றவற்றில் தொழிலாளர்கள் முழுமையாக பயன் பெற  புதியசட்டங்கள் கொண்டுவரப்பட உள்ளது.

எனது அரசு வந்தபின் இஎஸ்ஐயில் ரூ.15,000 வருவாய் உள்ளவர்களும் சிகிச்சை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதை மேலும் உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொழிலாளர்களின், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு நாடுமுழுவதும் உள்ள ஏராளமான மருத்துவக்கல்லூரிகளில் 10 ஆயிரம் மருத்துவ இடங்களை (எம்பிபிஎஸ் சீட்) அதிகரிக்க திட்டமிடப் பட்டுள்ளது. உடனடியாக நாடு முழுவதும் உள்ள 23 மருத்துவக் கல்லூரிகளில் 1,700 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கோவை, மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மருத்துவக்கல்லூரிகளில் 345 எம்பிபிஎஸ் சீட் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போல், தமிழகத்திலும் மருத்துவமனை கட்டப்படும்.

Leave a Reply