நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்தநேரமும் இடிந்துவிழும் நிலையில் இருப்பதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.


மக்களவையில் பதிலளித்து பேசியவர், நாடுமுழுவதும் உள்ள 1 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலங்களின் உறுதித் தன்மையை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் தணிக்கை செய்ததாக தெரிவித்தார். அவற்றில் 100க்கும் மேற்பட்ட பாலங்கள் எந்தநேரத்திலும் இடிந்துவிழும் அபாயத்தில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறிய நிதின்கட்காரி, இந்தப் பாலங்களை சரிசெய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply