இந்திய விஞ்ஞானிகள் அறிக்கைபடியும் உலக பத்திரிகைகள் தந்திருக்கும் தரவின்படியுமே எழுதுகின்றோம்

இந்தியா செய்திருக்கும் இந்த செயற்கைகோள் எதிர்ப்பு ஏவுகனை சோதனைக்கு DRDO 2012லே அனுமதிகேட்டது

ஆனால் அப்போதிருந்த காங்கிரஸ் அரசு அதற்கு மறுத்தது, ஏனென்றால் அதற்கு முன்பிருந்தே பலசிக்கல்களை அது சர்வதேசளவில் சந்தித்தது

உதாரணம் அணு ஆயுதபரவல் உட்பட பல நெருக்கடிகள் இருந்தன, ஆம் இந்த ஒப்பந்தத்தில் நாம் கையெழுத்திட்டால் இந்தியா இனி அணு ஆயுதம் செய்ய முடியாது என மிக உக்கிரமாக குரல் எழுப்பிய முதல் இந்திய அரசியல்வாதி ஜெயலலிதா

அப்படி எதற்கெல்லாமோ பன்னாட்டு சக்திகளுக்கு அஞ்சிய காங்கிரஸ் இந்த செயற்கைளோளை அழிக்கும் நுட்பத்திற்கு அனுமதி கொடுக்கவில்லை

அரசு அனுமதி கொடுத்து நிதி ஒதுக்கினால்தான் திட்டத்தை செயல்படுத்த முடியும், காங்கிரஸ் அரசு நிதி கொடுக்க வில்லை என்பதற்கு அப்போதைய DRDO தலைவர் சரஸந்த்சாட்சி

இப்பொழுது அதாவது 2016ல் மோடி அரசு அதற்கான உத்தரவினை உடனே கொடுத்தது, 2019ல் நாம் அந்த சாதனையினை செய்து விட்டோம்

பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் வித்தியாசம் என்ன தெரியுமா? கூர்ந்து கவனியுங்கள் புரியும்

காங்கிரஸ் இந்திரா காலத்திற்குபின் மாறிவிட்டது, அந்த பழைய தைரியமான காங்கிரஸ் இப்போது இல்லை”காட்” ஒப்பந்தம் என உலகசந்தையினை இந்தியாவுக்குள் விட்டது, இன்னும் பல விஷயங்களில் இந்திய நலனை பலிகொடுத்து வெளிநாட்டு சக்திகளுக்கு கட்டுபட்டுகிடந்தது

அதாவது காங்கிரஸின் கொள்கை என்னவென்றால் மக்கள் சுகமாக வாழட்டும் பணம்புழங்கட்டும் மற்றபடி நாட்டின் பாதுகாப்பு இன்னபிற விஷயமெல்லாம் எதற்கு? என்ற ஒரு மனநிலை

அதாவது மக்களை பற்றி நிரம்ப கவலைபடும், பொருளாதார தடை என வந்தால் மக்கள் என்னாவார்கள்? பணம் என்னாகும்? வெளிநாட்டுக் காரன் பணத்திற்கு என்னசொல்வது என ஏக விஷயங்களை அது பார்க்கும்

பாஜக அப்படி அல்ல, நாட்டுக்கு எதுதேவையோ அதுவே அவர்களுக்கு முதலிடம், அதனால் தான் கருப்புபண ஒழிப்பு உட்பட பல காரியங்களில் அவர்கள் மக்கள் நலனை அதிகம் யோசிப்பவர்கள் அல்ல‌

அவர்களின் பலதிட்டங்களை கவனியுங்கள் அதுதெரியும், இப்பொழுது இந்த ஏவுகனை சோதனைகூட பொருளாதார தடைவிதிக்கும் அளவு கடுமையானது, அணு சோதனைக்கு இணையானது

ஆனால் துணிந்து செய்தார்கள், நாட்டுக்காக செய்தார்கள்,இதில் ஏதும் சிக்கல் வருமாயின் மக்கள் தாங்கவேண்டும் என்பது அவர்களின் எண்ணம்

ஒரு வளரும் நாடு நாட்டுக்கு எது முக்கியமோ அதைத்தான் செய்ய வேண்டும். இதைத்தான் அமெரிக்கா, சைனா, ரஷ்யா, சிங்கப்பூர் என எல்லா நாட்டினையும் வளர்த்த தலைவர்கள் சொல்லியிருக் கின்றார்கள்

அது கென்னடியோ , டெங்ஜியோ பிங்கோ, ஸ்டாலினோ இல்லை லீயோ அவர்கள் சொன்னதெல்லாம் அதுதான்

நாட்டுக்கு அவசியமானதை செய்யுங்கள் அதில் சிக்கல் வந்தாலும் பின்வாங்காதீர்கள், பின்னொரு நாளில் மக்கள் உங்களை புரிந்து கொள்வார்கள்

ஆம் இந்திராவிற்கு பின்னரான காங்கிரஸ் மக்களை தாலாட்டிவிட்டு நாட்டுக்கு தேவையானதை செய்ய தயங்க்கும் கட்சி, பாஜக நாடே முதலிடம் என பல காரியங்களை செய்யும் கட்சி

இரு கட்சிகளின் நிலைப்பாட்டை சொல்லிவிட்டோம் அல்லவா? இனி நாட்டுக்கு எது தேவை என உங்களுக்கே புரிந்திருக்கும்

நன்றி ஸ்டாலின் ராஜன்

Leave a Reply