நாட்டின் ஒற்றுமையையும் ஒருமைப் பாட்டையும் பலப்படுத்துவதற்கு ஆளுநர்கள் பங்காற்றவேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாநில ஆளுநர்களின் மாநாடு டெல்லியில் ஜனாதிபதி மாளிகையில் கடந்த 2 நாட்களாக நடந்தது. மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி நேற்று நிறைவுறை யாற்றினார். அப்போது அவர் பேசும்போது, “யோசனைகளிலோ வளங்களிலோ, திறமையிலோ இந்தியாவில் பற்றாக் குறை இல்லை. இருந்தாலும் சிலமாநிலங்கள் பின் தங்கியிருப்பதற்கு அங்குள்ள ஆட்சிமுறையில் உள்ள குறைபாடுகளே காரணம். நல்ல ஆட்சி முறை இருக்கும் மாநிலங்களில் மக்களுக்கு பயன் தரும் பல்வேறு நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

இந்திரதனுஷ் திட்டம் போன்ற அரசின் முயற்சிகள் சிறப்பாகசெயல்பட ஆளுநர்கள் நடவடிக்கை எடுக்க முடியும். நாட்டின் ஒற்றுமை யையும் ஒருமைப் பாட்டையும் பலப்படுத்த ஆளுநர்கள் பங்காற்ற வேண்டும். ‘ஒரே இந்தியா’ போன்ற அரசின் முன்முயற் சிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு ஆளுநர்கள் பங்காற்ற வேண்டும்” என்றார்.

Leave a Reply