நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச்சேர்ந்த உயர் அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திரமோடி நேற்று மாலை ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது கரோனா வைரஸ்பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது தொடர்பாக அவர்களின் ஆலோசனைகளை அவர் கேட்டறிந்தார். பொருளாதாரத்தை விரைவாகமீட்க வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருக்கிறார். அதற்குத் தேவையான கருத்துகளை அதிகாரிகளிடம் கேட்டறிந்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெற்ற இந்தஆலோசனைக் கூட்டம் ஏறக்குறைய ஒன்றரை மணிநேரம் நீடித்தது. நிதி அமைச்சகம் மற்றும் வர்த்தக அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரிகள் தற்போதைய சூழலை எதிர் கொள்வது தொடர்பாக விரிவான அறிக்கைகளை பிரதமருக்கு எடுத்து காட்டியதாகக் கூறப்படுகிறது.

முன்னதாக பொருளாதார ஆலோசனை கவுன்சில், நிதித் துறை முதன்மை பொருளாதார செயலர், நிதிஆயோக் ஆலோசகர் ஆகியோருடன் 3 தனித் தனி கூட்டங்களை நடத்தி ஆலோசனைகளைக் கேட்டறிந்துள்ளார் பிரதமர்.

கரோனா வைரஸ்பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, கடந்த மே மாதம் மத்தியஅரசு ரூ.20.97 லட்சம் கோடி மதிப்பிலான சலுகை அறிவிப்புகளை வெளியிட்டது. பொருளாதார மீட்சிக்காக இந்தஅறிவிப்புகள் வெளியிடப்பட்டு அவை படிப்படியாக செயல்படுத்தப் படுகின்றன.

Comments are closed.