நாட்டின் முதல் புல்லட்ரயில் திட்டத்தை, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவுடன் இணைந்து தொடங்கிவைக்க இருப்பதாக, பிரதமர் நரேந்திரமோடி தெரிவித்திருக்கிறார்.

தனது பிரத்யேக டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்திருக்கும் பிரதமர் நரேந்திரமோடி, புல்லட் ரயில்திட்டம் உள்ளிட்ட திட்டங்களால், இந்தியா – ஜப்பான் இடையிலான, உண்மையான பந்தத்துடன் கூடியமதிப்புமிக்க உறவு, மேலும் விரிவடையும் என்றும் கூறியிருக்கிறார். புல்லட் ரயில்திட்ட தொடக்க விழாவில் பங்கேற்கவரும் ஜப்பான் பிரதமரை ஷின்சோ அபேவை வரவேற்க, இந்தியாவும், குஜராத்தின் அகமதாபாத் நகரமும் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார். புல்லட் ரயில் திட்டத்தின் தொடக்கபுள்ளியாக அமையும் அகமதாபாத் நகர், விழாக்கோலம் பூண்டிருப்பதோடு, கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்களால் ஜொலிக்கிறது…

ஜப்பான் நாட்டின் கூட்டு ஒத்துழைப்புடன், ஒருலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், அகமதாபாத் – மும்பை இடையே புல்லட் ரயில் திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, வரும் வியாழக்கிழமை அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ரயில் நிலையத்தில் நடைபெறவுள்ளது. 2023ஆம் ஆண்டுக்குள் திட்டம் நிறைவேற்றப்பட்டு, புல்லட் ரயில் பாய்ந்து செல்லும் என ரயில்வேதுறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்திருக்கிறார்….

Leave a Reply