நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரம்' என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், நாட்டின் பிரதான தொழிலதிபர்கள், தொழில்துறை நிபுணர்கள் பங்கேற்ற மாநாட்டில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது:
நாட்டின் முதுகெலும்பாக திகழ்வது பொருளாதாரமே. முதுகெலும்பு உடைந்து விட்டால் முழு உடலும் செயல்பாட்டை நிறுத்திவிடும். இதேபோல் மாநிலம் பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்தால், அம்மாநிலம் தங்களது இலக்குகளை அடையமுடியாது.

எனவே மாநிலங்கள் தங்கள் பொருளாதாரத்தை காப்பாற்றவேண்டியது இன்றியமையாதது. மாநிலத்தின் பொருளாதாரத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, மக்களின் அதிக பட்ச முதலீடு இருக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply