தொடர்ந்து 2-வது முறையாக துணை ஜனாதிபதி பதவியைவகித்த ஹமீது அன்சாரி நேற்றுடன் தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்றார். இதனையொட்டி மாநிலங்களவையில் பிரிவு உபசாரவிழா நடைபெற்றது.

இதில் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளையும்சேர்ந்த எம்.பிக்களும் கலந்துகொண்டு ஹமீது அன்சாரியின் சேவைகளை நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்தனர்.

மாநிலங்களவையில் பேசிய பிரதமர் மோடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹமீது அன்சாரி யிடமிருந்து பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டதாகக் கூறினார். நாட்டின் வளர்ச்சிக்காக இரவுபகலாக பாடுபட்டவர் ஹமீது அன்சாரி என்றும் தெரிவித்த பிரதமர் மோடி நினைவுபரிசினையும் வழங்கினார்.

Leave a Reply