பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துகின்றன..


இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பெட்ரோல்-டீசல் விலை உயர்வில் மத்திய அரசிற்கு எந்தபங்கும் இல்லை. விலை உயர்விற்கு மத்திய அரசு காரணமல்ல என்பதை நாட்டுமக்கள் அறிவார்கள். பெட்ரோல் – டீசல் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவில் பிரதமர் மவுனம் காப்பதாக குற்றம் சாட்டும் ராகுல், பீகாரின் ஜெகனாபாத் பகுதியில் மருத்துவமனைக்கு 2 வயது சிறுமியை ஏற்றிச்சென்ற ஆம்புலன்சை போராட்டக்காரர்கள் மறித்ததால் உயிரிழந் துள்ளதற்கு பதில் சொல்வாரா? அந்த குழந்தையின் மரணத்திற்கு ராகுலும், காங்.,கும் பொறுப்பேற்பாரா? நாட்டில் அச்சம்மிகுந்த சூழ்நிலையை காங்., உருவாக்கி வருகிறது என்றார்.

Leave a Reply