ரபேல் போர்விமான கொள்முதலில் பிரதமர் நரேந்திர மோடி ஒரு திருடர் என்ற புகாரை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக கூறியதற்கு ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ள நிலையில், அவர் ஒரு முதல் தர பொய்யர் என்றும், நாட்டுமக்களிடம் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

டெல்லியில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஜிவிஎல் நரசிம்ம ராவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வருத்தம் தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்திருப்பதன் மூலம், ரபேல் போர் விமான ஒப்பந்தப் பிரச்சினையில், பிரதமர் நரேந்திரமோடிக்கு எதிராக தான் கூறிய குற்றச்சாட்டுகள் பொய் என்பதை ராகுல் காந்தி ஒப்புக் கொண்டிருக்கிறார். ஒரு தேசியக் கட்சியின் தலைவர் தான்பொய் சொல்விட்டேன் என்று உச்சநீதிமன்றத்தின் முன்னிலையில் ஒப்புக் கொண்டிருப்பது இ

துவே முதல்முறை. வேண்டுமென்றே பொய் பேசியதன் மூலம் இல்லாத ஒரு பிரச்சினயை அவர் இருப்பதுபோல காட்டி வந்திருக்கிறார். ரபேல் பிரச்சினையில் தொடர்ந்து பொய் சொல்லி வந்ததற்காக நாட்டு மக்களிடம் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு பாஜக செய்தித் தொடர்பாளர் நரசிம்மராவ் குறிப்பிட்டார்.

Tags:

Leave a Reply