மத்திய அரசு, கால்நடை வர்த்தகத்துக்கான விதி முறையில் மாற்றம் கொண்டு வந்தது. அதன்படி, இறைச்சி மற்றும் தோல்பொருள்கள் தயாரிப்புக்காக மாடு, கன்று குட்டி, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை விற்கத்  தடைவிதிக்கப்பட்டது. மேலும்,  இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. இந்த உத்தரவின்படி, இறைச்சிக்காக மாடுகளை விற்பதும் வாங்குவதும் முறைப் படுத்தப்பட்டது.


இந்நிலையில், மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு செய்தியாளர்களிடம், "பி.ஜே.பி அரசு, மக்களை சைவ உணவுக்கு மாற்ற முயற்சிப்பதாக சிலர் கூறி வருகின்றனர். தாங்கள் எது சாப்பிடவேண்டும், வேண்டாம் என்பது அவரவர் விருப்பம். இதுகுறித்து டிவி விவாதங்களும் நடக்கின்றன. நான், எனது பத்திரி கையாளர் நண்பர்களிடமும் கூறினேன். நான் ஆந்திர பி.ஜே.பி-க்கு தலைவராக இருந்துள்ளேன். நானும் அசைவ உணவை உண்பவன் தான்" என்று கூறியுள்ளார்.

 

Leave a Reply