நான் இந்து என்பதில் பெருமைகொள்கிறேன் மோடியை சந்தித்ததால் விமர்சிக்கப்பட்டால் எதிர்கொள்ள தயார்.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் துளசிகாம்ராட் அதிரடி

நான் இந்து என்பதில் பெருமை கொள்கிறேன் மோடியை சந்தித்ததால் விமர்சிக்கப்பட்டால் எதிர்கொள்ளதயார்.. அமெரிக்க அதிபர் வேட்பாளர் துளசி காம்ராட் அதிரடி

ஜனநாயககட்சி சார்பில் இந்தமுறை அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவார் துளசி காம்ராட் இன்னும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஒருவருடமே மிச்சம் இருப்பதால் துளசியின் பேச்சுக்கள் அமெரிக்காவில் முக்கியத்துவம் பெற்று வருகின்றன.

ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் துளசி நான்குமுறை காவாய் மாகாணத்தில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானவர். மேலும் தற்போது தனக்கு எதிராக ஊடகங்கள் இப்போதே எதிர்மறை பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தாகவும் தான் ஒரு இந்துபெண் என்பதால் விமர்சிக்கப் படுவதாகவும் துளசி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இந்திய பிரதமர் மோடியை நான் சந்தித்தது குறித்து ஊடகங்கள் புலம்பி தீர்கின்றன நானும் இந்து மோடியும் இந்து அதனால் இந்தியாவிற்கு சாதகமான முடிவை எடுத்துவிடுவேன் என்று இப்போதே ஜோசியம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரை சந்திப்பதில் என்ன தவறு மேலும் ஆசிய நாடுகளிலே அமெரிக்காவுடன் நல்ல ஒத்துழைப்பில் உள்ள நாடு இந்தியாமட்டுமே மேலும் நான் மட்டுமா சந்தித்தேன் ஒபாமா, ஹிலாரி, தற்போதைய அதிபர் டிரம்ப் கூடத்தான் சந்தித்தார்.

நான் ஒருஅமெரிக்கர் இந்து மதம் என் தாய்மதம் நான் இந்து என்பதால் விமர்சிக்கப் பட்டால் அதனை எதிர்கொள்ள நான் தயார் நான் இந்து என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன் என்று துளசி தெரிவித்தார்.

அமெரிக்க அதிபர்கள் பற்றி உலக ஊடகங்கள் விவாதம் நடத்திய காலம் போயி மோடியை பற்றிய விவாதங்கள் அமெரிக்க தேர்தல் களத்தில் எதிரொலிப்பது மோடியின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்த்துள்ளதையே காட்டுகிறது.

Leave a Reply