பா.ஜ.க தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம்வகிக்கும், இந்திய குடியரசு கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே நேற்று நிருபர்களுக்கு பேட்டிஅளித்தார்.
 
அப்போது ரபேல்ஊழல் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
 
காங்கிரஸ் கட்சி, அதிலும் குறிப்பிட்டு கட்சியின் தேசியதலைவர் ராகுல் காந்தி ரபேல் போர்விமான ஒப்பந்தம் குறித்்து அதிக சத்தம் எழுப்பினார்.
 
ஆனால் பிரான்ஸ் நாட்டின் அதிபரே இது 2 நாடுகளுக்கு இடையேயான ஒப்பந்தம். இதில் யாருடையதலையீடும் இல்லை என்பதை உறுதிப்படுத்தி உள்ளார்.
 
மேலும் அனில் அம்பானி இது தொடர்பான புரிந்துணர்வில் எந்ததலையீடும் செய்யவில்லை என்பதை தெளிவுப்படுத்தி உள்ளார்.
 
இவ்வாறுஅவர் கூறினார்.
 
நற்சான்றிதழ் வழங்கினார்…
 
இதேபோல் சமீபத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் அளித்த பேட்டியில், “ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடிமீது மக்கள் சந்தேகிக்கின்றனர் என தான் கருதவில்லை என கூறினார்.
 
இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த ராம்தாஸ் அத்வாலே, “ ரபேல் விவகாரத்தில் சரத்பவார்கூட மோடிக்கு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இது ஒருநல்ல அறிகுறியாகும். எனவே தேசிய ஜனநாயக கூட்டணியில் சரத்பவார் இணைய வேண்டும். காங்கிரஸ்கட்சி தேசியவாத காங்கிரசை ஏமாற்ற பார்க்கிறது. நான் சரத்பவாரை இங்கு வரவேற்க விரும்புகிறேன்” என்றார்.
 
மேலும் அவர் கூறுகையில், “ஆளும் கூட்டணிக்கு எதிராக பெரியளவில் பிராந்திய கட்சிகள் கூட்டணி அமைத்தாலும், 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசியஜனநாயக கூட்டணி 300-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றும்” என்றார்.

Leave a Reply