புதிய குடியரசுத் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையநாயுடு இன்று காலை பெங்களூருவிலிருந்து தனிவிமானம் மூலம் ஆந்திரம் மாநிலம் ரேணிகுண்டா சென்று அங்கிருந்து திருப்பதி வெங்கடாஜலபதி பெருமாள் கோயிலுக்கு சுவாமிதரிசனம் செய்யசென்றார். சித்தூர் மாவட்ட ஆட்சியர் பிரத்யும்னா, தேவஸ்தான அதிகாரி அணில்குமார் மற்றும் பா.ஜ.க-வின் முக்கிய பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் வெங்கைய நாயுடுவை வரவேற்று அவரதுபயணத்தை ஒருங்கிணைத்தனர்.

திருமலையில் சுவாமிதரிசனம் செய்த பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வெங்கையநாயுடு கூறுகையில், ‘அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படும் குடியரசுத் துணைத்தலைவர் ஆகிய நான் தற்போது எந்தக்கட்சியையும் சேராதவன். எனது பொறுப்பை உணர்ந்து தன்னிச்சையாகச் செயல்பட்டு முடிவுகள் எடுப்பேன். அமைச்சரவையில் இருந்து விலகியுள்ள நான், மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியி லிருந்தும் விரைவில் விலகிவிடுவேன். குடியரசுத் துணைத்தலைவர் பதவிக்கான பொறுப்புகளை உணர்ந்து அரசியல் சாசனத்துக்கு உட்பட்டு கடமையாற்றுவேன்’ என்றார்.

Leave a Reply