கடந்த மாதம் 29ம்தேதி டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திரமோடி இல்லத்தில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார்.
இதைபார்த்தவர்கள் மோடி அப்படித்தான் செய்வார் என்று தெரிவித்தனர். சிலரோ, பிரதமர் அளித்த விருந்தில் கலந்துகொண்டு அவரையே குறை சொல்வதா என்று கேள்வி எழுப்பினார்கள்.
இந்நிலையில் இது குறித்து எஸ்.பி.பி. கூறியிருப்பதாவது,
இது ஏன் சர்ச்சையாகியுள்ளது?. என் செல்போனை பறித்துக்கொண்டார்கள், நான் பிரதமர் மீது அதிருப்தி அடைந்தேன் என்று நீங்கள் கூறியுள்ளீர்கள்…நான்பிரதமருக்கு எதிராக எதுவும் கூறவில்லை.
ஸ்டார்களுக்கு எதிராகவும் நான் பேசவில்லை. எங்களை செல்போன் எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை, ஆனால் சிலர் செல்ஃபி எடுத்தார்கள். அதுபோன்று எங்களால் எடுக்க முடியவில்லை. அவ்வளவு தான்.
நான் ஒருசாதாரண ஆள். அன்று நடந்ததை தெரிவித்தேன். அதுபுகார் இல்லை. மற்றவர்களுக்கு அளித்த அதேமரியாதையை எனக்கும் அளித்தார்கள். சிலர் செல்ஃபி எடுத்தபோது எங்களை மட்டும் ஏன் செல்போனை உள்ளே எடுத்துச்செல்ல அனுமதிக்கவில்லை என்றுதான் கேட்டேன் என்றார்.