ஏராளமான கனிமவளமும் மனித வளமும் இருந்தும் கூட, நம்நாடு இன்றும் வளர்ந்து வரும் நாடாகத்தான் இருப்பது ஏன்?’ என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் பேசினார்.

மஹாராஷ்டிரா மாநிலம் நாக்ப்பூரில் நடந்த நிகழ்ச்சியில், ஆர்எஸ்எஸ்., தலைவர் மோகன்பாகவத் பேசியதாவது:

நம் நாடு சுதந்திரம் அடைந்தபோது தான், இஸ்ரேல் உருவானது. அதன் பிறகுகூட, அது தனிநாடு என்ற அந்தஸ்தை பெற பலபோர்களை சந்திக்க நேர்ந்தது. இவ்வளவுக்குப் பிறகும் அந்த நாடு, இன்று வளமான நாடாக உருவெடுத்துள்ளது.

ஆனால், நாம் இன்றும் வளர்ந்து வரும் நாடாகத் தான் இருந்து வருகிறோம். ஆங்கிலேயரிடம் இருந்து நமக்கு சுதந்திரம்கிடைத்த போது, நம்மிடம் ஏராளமான மனிதவளம், கனிம வளம் இருந்தது. கணக்கிட முடியாத செல்வமான விவசாய பூமி நம் கைவசம் இருந்தது.

இத்தனையும் இருந்தும் நாம் ஏன்வளரவில்லை என்பதை யாேசித்தால், எங்கோ தவறு நடந்துள்ளது புரிகிறது. ஜப்பானை எடுத்துக் கொண்டால், ஹிரோஷிமா, நகாசாகி குண்டுவெடிப்புக்கு பின்னும், துடிப்புடன் மீண்டெழுந்தது. நாம், பயணிக்கவேண்டிய துாரம் இன்னும் நிறைய உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply