பல விசயங்கள் மோடி அவர்களின் பெயரை கெடுப்பதற்காகவே திடடமிட்டு அரங்கேற்றப்படுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்:

திருநெல்வேலி மாவட்டம் ஆலங்குளத்தில் உள்ள ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியில், ஒரு மூதாட்டி ஓய்வூதிய கணக்கு வைத்திருப்பதாகவும், அவர்கள் தன்னுடைய ஓய்வூதியத்தை வங்கியிலிருந்து பணமாக்க சென்ற போது, குறைந்த பட்ச வைப்பு(Minimum Balance) இல்லை என்ற காரணத்தினால் ரூபாய் 350/- பிடித்தம் செய்து ரூபாய் 650/- ஐ மட்டும் அவருக்கு வங்கி செலுத்தியதாகவும், அதையடுத்து அந்த மூதாட்டி மிகுந்த துயர் அடைந்து விட்டதாகவும், இதற்கு காரணம் மோடி அரசு தான் என்றும் சமூக ஊடகங்களில் ஒரு செய்தியும், ஒரு மூதாட்டியின் படமும் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதை பார்வையிட்ட நான் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். இதில் உள்ள உண்மை தகவல்களை அறிவதற்காக சிரமப்பட்டு அந்த வங்கியின் ஒரு அதிகாரியை தேடி கண்டுபிடித்து தொடர்பு கொண்டேன்.இது குறித்து விசாரித்தேன். அவர் அளித்த தகவல்கள்.

1. அந்த மூதாட்டிக்கு அந்த வங்கி கிளையில் கணக்கே இல்லை.

2. அந்த மூதாட்டி அந்த ஊரை சேர்ந்தவரேயில்லை.

3. அந்த கிளை ஓய்வூதியத்தை வங்கியில் வழங்குவதேயில்லை.

4. இது குறித்து சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளோம்.

5. இந்த கணக்குகளில் குறைந்த பட்ச வைப்பு பிடிக்க முடியாது.

இவைகளை குறிப்பிட்டு, "முடிந்தால் எங்களுக்கு உதவுங்கள். வங்கியின் பெயர் பாதிப்புக்குள்ளாகிறது " என்று கூறினார்.

திட்டமிட்ட ரீதியில், இந்த தகவல் மத்திய அரசை, பாஜகவை குறி வைத்து பரப்பப்பட்டுள்ளது. நேற்று, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பதை அறிய, நம் கட்சியில் சமூக ஊடகங்களில் கவனம் செலுத்தும் சிலரிடம் சொல்லி விசாரித்ததில் இடது சாரி இயக்கங்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று மார்தட்டி கொள்ளும் சிலரை அடையாளம் கண்டு கொண்டோம். அதன் பிறகு அவர்களில் சிலரிடையே இது குறித்து பேசினேன். சிலருடைய பதிவுகளில் விமர்சனங்களை செய்து பார்த்தோம். திடீரென்று இன்று அந்த நபர்களின் பதிவுகளை காணோம். ஆனாலும், வேறு சில நபர்களின் மூலம் தொடர்ந்து இந்த மோசடி பரப்பப்பட்டு வருகிறது.

பாஜக அரசை விமர்சிப்பதற்கு இந்த தீய சக்திகள் எந்த எல்லைக்கும் போவார்கள். நாம் விழிப்புடன் இருக்க வேண்டிய காலகட்டம் இது. மத்திய அரசு குறித்த விமர்சனங்கள் அனைத்தையும் தெளிவாக புரிந்து கொண்டு அதன் மீதான நம் எதிர்வினையை ஆற்ற வேண்டியது கட்டாயமாகிறது. தமிழில், புகை படத்துடன், எளிமையாக நம்பிக்கை வருவது போல், உணர்ச்சிகளை தூண்டி விடும் வகையில் செய்யப்படும், இது போன்ற வதந்திகளை எதிர்கொண்டு அவைகளை முறியடித்து, மக்கள் மத்தியில் மோசடி இயக்கங்களை அம்பலப்படுத்துவது நம் தலையாய கடமை. இது ஒருங்கிணைப்பின் மூலமே சாத்தியம். நம் கட்சியின் தகவல் தொழில் நுட்ப துறையுடன் ஒருங்கிணைந்து தீய சக்திகளின் மோசடிகளை முறியடிப்போம்.

தேச துரோகிகளை அடையாளம் கண்டு மக்களை காப்போம்.

நாராயணன் திருப்பதி.

Leave a Reply