நாளைமறுநாள் அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, முதல்முறையாக அதிபர் டிரம்ப் சந்தித்து பயங்கர வாதம் உட்பட முக்கிய பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளார்.


பிரதமர் நரேந்திரமோடி நாளை முதல் போச்சுக்கல், அமெரிக்கா, தெதர்லாந்து ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைப்பை ஏற்று, வரும் 25ம் தேதி பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்கிறார். அமெரிக்க அதிபரை முதல்முறையாக சந்திக்கும் பிரதமர் மோடி, பயங்கரவாத ஒழிப்பு, எச்1–பி விசா கட்டுப்பாடுகள், பிராந்திய விவகாரங்கள், இருதரப்பு உறவை வலுப்படுத்துதல் போன்றவை குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றபிறகு, பிரதமர் நரேந்திர மோடி 3 முறை தொலைபேசியில் பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply