இந்நாட்டில் அகில இந்திய அடையாளமாக ஒரு தலைவன் உருவாவது கடினம், காலம் ஒன்றே அதை கொடுக்கும்

நேரு, இந்திரா, ராஜிவ் என்பவர்களே அகில இந்திய அடையாளங்களாக இருந்தனர், இதில் ராஜிவ் என்பவர் தன்னை நிரூபிக்கும் முன்பே பிரிக்கபட்டார்

நேரு சாஸ்திரி இந்திரா போன்றவர்களோடு அந்த வரிசை முடிந்தது, அதன் பின் இன்னொரு தலைவன் அப்படி வரமுடியாது என்றார்கள், மாநில கட்சிகள் மற்றும் பிரிவினைவாதிகளின் ஆட்டம் உச்சத்தில் இருந்தது

பெரும் அகில இந்திய தலைவனாக வந்திருக்க வேண்டிய மன்மோகன்சிங்கும் காங்கிரசின் உட்கட்சி மோதலால் ஒதுக்கபட்டார்

இந்த இக்கட்டான நிலையில்தான் அகில இந்திய அடையாளமாக உருவாகி வந்தார் மோடி, நிச்சயம் அது சாதனை, மாபெரும் சாதனை , யாரும் எதிர்பாரா ஒன்று

பாஜக கட்சி எப்பொழுதும் ஆச்சரியங்களை கொடுக்கும், தமிழிசை கவர்னராது போல பலத்த ஆச்சரியங்களை கொடுக்கும் கட்சி அது, அப்படித்தான் மோடியினையும் கொடுத்தது

மோடி சும்மா வரவில்லை, தன்னை குஜராத் மாநில முதல்வராக நிரூபித்துவிட்டுத்தான் வந்தார், ராகுல் எந்த பொறுப்பிலும் இல்லாமல் வந்தது போல் வரவில்லை, காங்கிரஸ் செய்த பெரும் தவறு ராகுலுக்கு ஒரு பொறுப்பான அரசு பதவியும் கொடுக்காதது

மோடி குஜராத்தில் தன்னை நிரூபித்தார், கலவரங்களை அடக்கினார் அதில் சர்ச்சை இருந்தாலும் அமைதியினை நிலைநாட்ட வேறு வழி அவருக்கும் தெரியவில்லை

ஆனால் அதன்பின்னும் குஜராத்தில் அவர்தான் வென்றார், அந்த சரோவர் அணை கட்டபடும்பொழுது போராட்டம் நடந்தது இன்று அது மிகபெரும் பலனை கொடுப்பது தெரிகின்றது

அந்த அணை கட்டபடும்பொழுது சர்வாதிகாரி என்றார்கள், இன்று அணையின் பலன் தெரியும் பொழுது சத்தமே இல்லை

நிச்சயம் இந்த நாடு அவரை நேசிக்கின்றது, நேருவுக்கு பின் அசுரபலத்தோடு ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடிதான் சந்தேகமின்றி சொல்லலாம்

அவரின் முதல் 5 வருட ஆட்சியின் சிறப்பு ஊழலின்றி ஒரு ஆட்சியினை நேரு காலத்துக்கு பின் கொடுத்தது, நிச்சயம் ஒரு புள்ளி கூட ஊழல் என யாரும் காட்டமுடியாது, ரபேல் விவகாரத்தில் துளி ஆதாரமுமில்லை அட்டகாசமாக விமானங்களும் வரபோகின்றன‌

2002ல் அவரை முடக்கினார்கள், இனபடுகொலையாளி என ஹிட்லர் முதல் ராஜபக்சே வரையிலான பட்டியலில் சேர்த்தார்கள், அமெரிக்கா கூட விசா மறுத்தது

ஆனால் தேசமே அம்மனிதனை ஏற்றுகொண்டபின் உலக நாடுகள் உண்மையினை புரிந்தன, எல்லா நாடும் அவரை வரவேற்றன‌

உலக விவகாரத்தில் அவரின் அணுகுமுறை வாழ்த்துகுரியது, எந்த நாட்டுக்கும் இந்தியா எதிரி அல்ல என்பதை அட்டகாசமாக கொண்டு சேர்த்தார்

உலகம் அவரை புரிந்தது, பாகிஸ்தான் தனிமைபட்டது மிக அட்டகாசமான ராஜதந்திர வெற்றி அது. அதில்தான் பாகிஸ்தானை பால்கோட்டில் தூக்கி போட்டு மிதிக்க முடிந்தது, 370 ரத்து செய்து காஷ்மீரை தக்கவைக்க முடிந்தது

நேருவும் இந்திராவும் செய்யா சாதனையினை மோடி செய்தார், அதை வாழ்த்தத்தான் வேண்டும்

அவரின் காலத்தில் கருப்புபண ஒழிக்க முயற்சி எடுத்தார், அதன் விளைவுகளே விஜய் மல்லையா முதல் பலரை ஓட செய்தன, அனில் அம்பானியே தலையில் துண்டை போட்டது அப்பொழுதுதான்

நாட்டின் உண்மையான தோற்றத்தை வெளிகொண்டுவந்தது அந்த நடவடிக்கை

அதன் விளைவுகள் சில சறுக்கல்களை கொடுத்தாலும் நல்ல விஷயம் நடந்திருப்பதையும் மறுக்க முடியாது

ராணுவம் மோடிகாலத்தில் பலபடுத்தபட்டது ரபேல் விமானம், எஸ் 400, இன்னும் ஏராளமான பலபடுத்தல்கள் நடந்தன‌

கொஞ்சமும் தயக்கமின்றி செயற்கைகோள் தகர்ப்பு ஏவுகனையும் அவர் அனுமதியுடன் சோதிக்கபட்டது

கங்கை நதியில் அவர் ஏற்படுத்தியிருக்கும் நீர்வழி போக்குவரத்து மாபெரும் வெற்றி, போக போக அதன் முக்கியத்துவம் புரியும்

மோடி வந்தபின் ராமேஸ்வர மீணவனுக்கு கடலில் உயிர் ஆபத்து ஒன்றுமில்லை அது நோக்க கூடியது

தொண்டு நிறுவணங்கள் எனும் பெயரில் அந்நிய சக்திகள் ஊடுருவும் இடங்களை அவர் வைக்கவேண்டிய இடத்தில் வைத்தபின் நாட்டில் கனத்த அமைதி

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பிரிவினைவாதிகளை ஒடுக்கிவைத்திருக்கும் இரும்பு தலைவன் மோடி என்பது மிகையில்லை

மனிதர் அதிகம் பேசவில்லையே தவிர, அவரின் உழைப்பும் ஆர்வமும் கொஞ்சமல்ல, அம்மனிதன் ஓடி ஓடி ஓடிகொண்டே உழைத்தான்

அவன் பாரத பிரதமராயினும் தன் தாயோடு சந்திப்பது சில நொடிகளே, அவர் நாட்டுக்கே ராஜாவாயினும் அவனின் உடன்பிறந்தோர் இன்று காரில் கூடசெல்லவில்லை, அந்த முதியதாய்க்கு வேலைகாரி கூட இல்லை

காமராஜர், கலாமுக்கு பின் நாடுகண்ட மாபெரும் தியாகி மோடி, ஆம் குடும்பத்தாருக்கு அவர்களால் சல்லிகாசு பலனில்லை

இதை அவரின் எதிரிகளும் ஒப்புகொள்ளத்தான் வேண்டும் மறுக்க முடியாது

நாம் மோடியினை ஆழ கவனிக்கின்றோம், அம்மனிதன் நாட்டிற்காக ஓடுகின்றான் உழைக்கின்றான்

நட்டவிதை உடனே பலன் தரா

வாஜ்பாயின் தங்க நாற்கரம் 1997ல் அறிவிக்கபட்டு 2009ல்தான் அதன் பலன் இந்தியா அறிந்தது

அப்படியாக மோடியின் திட்டங்களை இன்னொரு நாளில் இந்தியா அறியும் அப்பொழுது அம்மனிதனை வணங்கும்

நாம் முன்கூட்டியே வணங்குகின்றோம் அவ்வளவுதான்

இந்த இரண்டாம் கட்ட ஆட்சியில் அவருக்கு சிக்கலே, ஆம் ஜெட்லி இல்லை, பாரிக்கர் இல்லை, சுஷ்மா இல்லை இது போக உலகமே ஒருவித சிக்கலில் இருக்கின்றது

அதன் விளைவு இந்தியாவிலும் எதிரொலிக்கின்றது

முடிந்தவரை அவர் போராடுகின்றார், சீனா பாகிஸ்தான் பொருளாதாரம் அதலபாதாளத்தில் சரியும் நேரம் ஓரளவு இந்தியா தாங்கித்தான் நிற்கின்றது

இன்னும் தேவைபட்டால் ஜிஎஸ்டி ரத்து போன்ற திட்டங்கள் இருப்பதாக சொல்கின்றார்கள், பார்க்கலாம்

இப்பொழுது எண்ணெய் விலையும் இனி சவாலே

ஆனால் மோடியின் வாழ்வு சவால்களை வென்றே இதுகாலம் வந்திருக்கின்றது

அவர் இன்னும் வெல்வார், நிலைப்பார். அவரால் தேசம் செழிக்கும் பலம் பெறும்

அவரை குறைசொல்பவர்கள் சொல்லிகொண்டே இருக்கட்டும், எல்லோருக்கும் நல்லவன் என யாருமில்லை அது கடவுளின் அவதாரங்களால் கூட சாத்தியமில்லை

ஒரு மனிதன் குடும்பமின்றி, ஓய்வின்றி, உறக்கமின்றி நாட்டுக்காக ஓடி ஓடி உழைக்கின்றான் என்றால் தேசமும் அவனை நம்பி மாபெரும் செங்கோலை கொடுக்கின்றது என்றால் விஷயம் இல்லாமல் இல்லை

காலம் கொடுத்த தலைமகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இன்னொரு அகில இந்திய அடையாளமாக ஒரு இரும்பு தலைவன் உருவாகி வரும் காலமட்டும் இந்த செங்கோல் அவன் கையிலே இருக்கட்டும்

நேருவும் இந்திராவும் காமராஜரும் விட்டு சென்ற பணியினை அவர்களின் வாரிசாக தொடரும் திருமகனுக்கு எல்லா நலன்களும் கூடி வரட்டும்

இந்நாட்டின் எல்லா தெய்வங்களும் அந்த வல்ல ஞானமகனை தேசத்து திருமகனை வாழ்த்தட்டும்

Comments are closed.