பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நிதித்துறை இணை அமைச்சராக கூடுதல்பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சரவை இன்று மூன்றாவதுமுறையாக மாற்றியமைக்கப் பட்டுள்ளது. இதில், ஒன்பதுபேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது. ரயில்வேதுறை அமைச்சராக இருந்த சுரேஷ்பிரபு, வர்த்தகத்துறை ஒதுக்கப்பட்டது. அதற்குபதிலாக, மின்சாரத்துறை அமைச்சராக இருந்த பியூஸ்கோயலுக்கு ரயில்வே துறை ஒதுக்கப்பட்டது. இதையடுத்து பியூஸ் கோயலிடம் இருந்த மின்சாரத்துறை, ராஜ் குமார் சிங்கிற்கு ஒதுக்கப்பட்டது.

இதனிடையே, மத்திய அமைச்சரவையில்,தமிழகத்தைச்சேர்ந்த பொன்.ராதாகிருஷ்ணன் ஏற்கெனவே, கப்பல் போக்குவரத்துத் துறையின் இணை அமைச்சராக இருந்துவருகிறார். இந்நிலையில், தற்போது பொன்.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதலாக நிதித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், நிதித்துறையின் இணை அமைச்சராகியுள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன். ஏற்கெனவே, தமிழகத்தைச்சேர்ந்த நிர்மலா சீதாராமனுக்கு பாதுகாப்புத் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

நிதி, பாதுகாப்பு என்று மத்திய அமைச்சரவையின் முக்கியமான இரண்டுதுறைகளில் தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு வழங்கப்பட்டுள்ளது, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவாக கருதப்படுகிறது.

Leave a Reply