பீஹார் சென்றுள்ள பாஜக தேசியதலைவர் அமித் ஷா, தலை நகர் பாட்னாவில், ஐக்கிய ஜனதாதள தலைவரும், அம்மாநில முதலமைச் சருமான நிதிஷ் குமாரை சந்தித்தார். இருகட்சிகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படும் சூழலில் நடைபெற்ற இந்தசந்திப்பு, தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப் படுகிறது. 

 
பின்னர், பாட்னாவில் நடைபெற்ற  பாஜக ஊழியர்கூட்டத்தில் உரையாற்றிய அமித் ஷா, பீஹாரில் நிதிஷ்குமாருடன் கூட்டணி தொடரும் என அறிவித்தார். பீஹாரில் பாஜக – ஐக்கிய ஜனதாதள கூட்டணி, நாடாளுமன்ற தேர்தலில், 40 தொகுதிகளிலும் வெற்றிபெறும் என்று அமித்ஷா நம்பிக்கை தெரிவித்தார். இதனிடையே, இன்றிரவு நிதிஷ்குமாரை மீண்டும் சந்தித்து அமித் ஷா முக்கிய ஆலோசனை நடத்துவார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply