நாடுமுழுவதும் உள்ள சுய உதவிகுழு பெண்களுடன் பிரதமர் நரேந்திரமோடி இன்று உரையாடினார்.

ஆதாரவற்ற மற்றும் பொருளா தாரத்தில் பின் தங்கிய குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அந்த குடும்பதங்களின் பெண்கள் சுய உதவி குழுக்கள் தொடங்கி பயன் அடைகின்றனர்.

இவர்களுக்கான அரசு நிதி ஒதுக்கீடு தீன்தயாள் அந்த்யோதையா – தேசிய கிராமப்புற வாழ்வாதாரத் திட்டம் மூலம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பயன்பெற்ற பெண்கள்களுடன் இன்று காலை பிரதமர் நரேந்திரமோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாடினார்.

காலை 9.30 மணிக்கு தொடங்கிய இந்த உரையாடலில் நாட்டின் பல பகுதிகளிலிருந்து பெண்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் உடுமலையில் ஏற்படுத்தப்பட்ட 11 மையங்களிலிருந்து சுய உதவி குழுக்களை சேர்ந்தபெண்கள் பிரதமருடன் உரையாடினர்.

அப்போது அவர், அடிமட்டத்திலிருந்து மகளிர் சுய உதவிக் குழுக்கள் எத்தகைய நேர்மறை மாற்றங்களை கொண்டுவந்துள்ளன என்பதை காட்டுவதே இந்த கலந்துரையாடலின் நோக்கம். மகளிர் சுய உதவிக் குழுக்களின் செயல்பாடுகளை கேட்பது அற்புதமான அனுபவமாக உள்ளது.

பெண்கள் தற்போது அனைத்து துறையிலும் முன்னேறிவருகின்றனர். குறிப்பாக விவசாயம், பால்பொருள் தயாரிப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். பெண்கள் இல்லாமல் இந்ததுறைகள் செயல்பட முடியாது. பெண்களின் விடாமுயற்சி மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாடு மிகுந்த உத்வேகத்தை தருகிறது.

மகளிர் சுய உதவி குழுக்களால், இன்று பெண்தொழில் முனைவோர்கள் உருவாகி வருகின்றனர். இது போனற சுய உதவிக் குழுக்கள் மூலம் பெண்கள் பொருளாதாரத்தில் வலிமை அடைந்து வருகின்றனர். பெண்கள் நிதி சுய சார்புடன் இருப்பதால் அவர்கள் மேலும் உறுதியான வர்களாகவும், அதிகாரம் மிக்கவர் களாகவும் மாறும் சூழல் ஏற்படுகிறது. நிதி அதிகாரம் இருந்தால் மட்டுமே பெண்கள் சமூக தீமைக்கு எதிராக போராடமுடியும்

Leave a Reply