Financial Resolution and Deposit Insurance(FRDI) திட்டத்தை பிஜேபி அறிவித்து விட்டது – போச்சு எல்லாம் போச்சு மக்கள் பணம் எல்லாம் போச்சு என்று பரவும் செய்தி பற்றி கொஞ்சம் அனைவருக்கும் புரியும்படி விளக்கவும். பெரிய பொருளாதார நிபுணர்கள் கணக்கு எல்லாம் வேணாம் பிளீஸ்  {கேள்வி: ஸ்ரீநிவாஸ் , முரளி , விக்னேஷ் இன்னும் சிலர்}

நேரடியாக விவகாரத்தின் உள்ளே செல்வதற்கு முன் பொதுவாக பலருக்கு தனியார் வங்கி எப்படி ஆரம்பிக்கலாம்? என்று தெரியாது அதை முதலில் மேலோட்டமாக புரிந்து கொண்டு விட்டு பின் விசயத்தின் உள்ளே செல்லலாம். அது தான் படிக்கும் மாணவர்களுக்கு நல்லது என்று நினைக்கிறேன். {john nash equilibrium theory போட்டு எல்லாம் உங்களை குழப்ப மாட்டேன் – ரெம்ப எளிமையாக முடிந்த அளவு கூற முயற்சிக்கிறேன் ஓர் அளவுக்கு மேல் எளிமையாக கூற முடியாது அதையும் புரிந்து கொண்டு மேற்கொண்டு படிக்கவும்}

1.முதலில் ICICI போல யார் வேண்டுமானாலும் பேங்க் ஆரம்பிக்கலாம். தனியார் வங்கி நடத்த License விண்ணப்பிக்க தகுதி வேண்டும். வங்கி ஆரம்பிக்க உங்களுக்கு Lincense கிடைக்க உங்களிடம் 500கோடி முதலில் இருக்க வேண்டும். 500கோடி நீங்கள் ஆரம்பிக்க தேவை என்னும் போது, அதை நீங்கள் உங்க கம்பெனி share மூலமாக வசூல் செய்தாலும் சரி , இல்லை bonds பத்திரங்கள் மூலமாக வசூல் செய்து காட்டலாம். இல்லை Debenture மூலமாக. எது எப்படியோ 500 கோடி இருக்கனும். இப்போ தாராளமாக நீங்க reserve bank of india-விடம் license கேட்டு விண்ணப்பிக்கலாம். அவர்கள் License தருவதற்கு ஒரு குறிப்பிட்டகாலம் எடுத்து கொள்வர். (2,3வருடம் சில நேரம் அதற்கும் மேலே). {share , Bonds எல்லாம் என்னனு கொஞ்சம் தேடி படிக்கவும்}

License கிடைத்ததும் வங்கி இயக்கம் முதலில் தெளிவு வேண்டும். அதற்கு பல வழி முறைகளை RBI காட்டும். பொதுவாக பணம் வரும் வழி , செல்லும் வழி இரண்டு தான்.

2.மக்கள் அக்கவுண்ட் ஆரம்பிக்க அதில் பணத்தை போடுகிறார்கள், சிலர் Fixed deposit, சிலர் saving நிறுவனங்கள் current account என்று பணம் வர தொடங்குகிறது தவிர வங்கிகள் மத்திய அரசின் நிதி. இது ஒரு பக்கம்.. அடுத்த இருக்கும் பணத்தை வீட்டு கடன், personal loan , business loan என்று கொடுப்பது. இதனால் வந்த பணம் மீண்டும் புழக்கத்திற்க்கு செல்லும். இங்கே வந்த பணத்தை எல்லாம் நீங்க கடனை கொடுத்துட்டா வங்கியில் பணம் போட்ட நம்ம ஆளு பணம் எடுக்க வந்து பணம் இல்லைனு சொல்ல நிர்வாக பிரச்சனையை சமாளிக்க முடியாது. எனவே இது போல பிரச்சனை எழாமல் இருக்க NDTL, CRR , SLR, Repo Rate என்று சில அடிபடை வழிமுறைகளை காட்டுகிறது RBI. எல்லா நாடுகளுமே இப்படியே இயங்கும் என்றாலும் கொஞ்சம் வித்தியாசபடும். ஆனால் பொது விதி இதுவே.

-(NDTL)Net Demand and Time Liabilities மிக முக்கியமான ஒன்று.

Demand Liabilities – என்றால் நம்ம saving, current account மூலமாக வந்து செல்லும் பணம் . தேவைபடும் போது பணத்தை எடுத்து கொள்வர்.Time Liabilities – என்பது Fixed deposit போன்றவை மூலம் வரும் பணம். இது குறிப்பிட்ட காலத்திற்கு வங்கியில் இருக்கும். தேவைபடும் நேரம் எல்லாம் மக்கள் எடுத்து கொள்வது கிடையாது.அது போன்ற Deposits.ஆக இந்த இரண்டு வழிகளில் தான் மக்கள் பணம் வர போகிறது. இதன் மொத்த மதிப்பு NDTL என்று எண்ணி கொள்ளவும். (அதிலும் சில ஆழமான கணக்கு உண்டு அதை சொல்லி குழப்ப விரும்பவில்லை. மேற்கொண்டு செல்லவும்.)

அடுத்து CRR -Cash Reserve Ratio , SLR- Statutory Liquidity Ratio இந்த இரண்டையும் கொண்டு தான் பணபுழக்கத்தை கட்டுபடுத்துவர். மேலும் நிர்வாக ரீதியாக தோல்வி அடைந்தாலும் மக்கள் பணத்தினை காப்பாற்ற வேண்டி இந்த வேலை. இதன்படி NDTL மொத்த மதிப்பில் CRR 4% , SLR 21.50% அளவு தொகையை Reserveவாக RBIயிடம் கொடுத்துவிடவேண்டும். CRR பணமாக பெற்று கொள்வர் RBI,இதற்கு இந்த வட்டியும் கிடைக்காது. SLR 21.50% இதை RBI கூறியுள்ளபடி govt securities எதிலாது முதலீடாக வைத்திருக்க வேண்டும். அரசின் தங்கம் பத்திரங்கள், Govt Bonds என்று எதாவது வகையில் பாதுகாக்கபட வேண்டும். இதற்கு வட்டி கிடைக்கும்.

-இது போக மீதம் உள்ள பணத்தினை கொண்டு நீங்கள் வங்கி நடவடிக்கைகள் லோன் என்று கொடுக்க ஆரம்பிக்கலாம். அதற்கும் வழிமுறைகள் உண்டு.

-மூன்றாவதும் முக்கியமும் ஆனது எது? லாபம்.. நியாயமான லாபமே அனைத்து தொழில்முனைவோரின் இழக்கு. அப்படி இருக்க private bank ஆரம்பிக்க விரும்பும் உங்களுக்கும் அதுவே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும்.வங்கியை பொருத்தவரை லாபம் என்பது Loan மூலம் கிடைக்கும் வட்டி தான் லாபம். அதை Demand Liabilities மூலம் சேமித்த மக்களுக்கு வட்டி கொடுக்க வேண்டும் அல்லவா அதை கழித்துவிட்டு பார்த்தால் மீதம் இருப்பதுவே லாபம். இதை எப்படி கணக்கு போடுவது? சரியான நிர்ணயம் செய்வது?

{அது ரெம்ப சிம்பிள் ICICI, AXIS , HDFC என்று தனியார் வங்கிகள் அனைத்தையும் பாருங்கள் logo மட்டும் தான் வேறூ.. செயல்படுவதும் , அதன் system Structure ஒன்று தான். சேவை தரும் தகுதியில் தான் மாறுபடும். எனவே அப்படியே அவர்கள் system காப்பி அடிச்சுகோங்க.. அதான் safe.ஆரம்பிக்கும் போதே இந்தியா முழுவதும் கிளைகள் இருக்க வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை. 4ல் ஒன்று பின்தங்கிய மாவட்டத்தில் இருக்க வேண்டும். எனவே தமிழ் நாட்டில் ஆரம்பித்து முக்கியமான 10 நகரங்களில் கிளைகள் தொடங்கி பின்னர் விரிவுபடுத்துவதே எளிது. -Debit credit card எல்லாம் தனியார் Visa, MasterCard போன்ற நிறுவனங்கள் மூலமாக வாங்கி கொள்ளலாம். எனவே அதை குழப்ப வேண்டாம். mobile , website , online payment gateway போன்ற வேலைகள் எல்லாம் அனைத்து software கம்பெனி காரர்கள் கையில் தயாராக வைத்து உள்ளனர். இப்போலாம் செலவும் அதற்கு அதிகம் ஆவது இல்லை.]
———————————————

சரி இப்போ வங்கி விஷயம் புரிந்ததா???? இது புரியாமல் எதுவுமே புரியாது உங்களுக்கு இந்த FRDI விவகாரம்.

மோடி ஆட்சிக்கு வரும் போது இந்திய வங்கி துறையில் இருந்த பல பிரச்சனைகளில் முக்கியமானது இந்த கடன்… Non-performing asset (NPA). வாராகடனின் மதிப்பு மிக பெரிய சவாலாக உருவாகிய நேரம் தான் மோடி ஆட்சிக்கு வருகிறார். அப்டினா என்ன?

இப்போ நான் ஒரு வங்கி வைத்துள்ளேன் அதன் பெயர் GKV Bank. இப்போ எனது வங்கி மூலம் நான் எனக்கு தொடர்பில் உள்ள செல்வந்தர்கள் , நிறுவனங்களுக்கு சில நூறு கோடியை கடனாக கொடுக்கிறேன். தொழில் கடன் என்று கூறி அதில் நான் வேண்டும் ஆவணங்கள் தவறாக உருவாக்கி கொடுத்து – பின்னாளில் அந்த அந்த நிறுவனம் நஷ்டம் ஆனால்??? வசூலிக்க முடியாத கடன் என்று கூறி அரசிடம் கொடுத்து பல்லை காட்டுகிறேன்.

நன்கு புரிந்து கொள்ளுங்கள் – இந்தியாவில் நீங்கள் ஒரு மெடிக்கல் காலேஜ் ஆரம்பிக்க 500கோடி வேண்டும் என்றால் பத்து பைசா செலவு இல்லாமல் ஆரம்பிக்க கூட வழியுண்டு இந்த வங்கி அதிகாரிகள்-அமைச்சர்கள் துணை இருந்தால். இப்போ நீங்க ஒரு கடன் வாங்குகிறீர் கட்டவில்லை என்றால் உங்கள் வீட்டை ஜப்தி செய்து விற்று வங்கி கடனை எடுத்து கொள்ளும். ஆனா நீங்கள் வாங்கியது 1கோடி கடன் , ஆனால் உங்க வீட்டின் மதிப்பு 30லட்சம் தான் என்றால்??? 1000கோடி கடனுக்கு நீங்கள் கொடுத்த சொத்தின் உண்மை மதிப்பு வெறும் 300கோடி என்றால் பிரயோஜனம்??? கொடுத்த கடன் வசூல் ஆகாது. எப்டி இப்டி கடன் கொடுத்தார்கள்??? சட்டத்தில் உள்ள வோட்டைகளை கொண்டு – ஆவணங்கள் உருவாக்கி அதிகபடியான கடனை கொடுத்து அதற்கு தகுந்த லஞ்சம் வாங்கி கொள்வது காலம் காலமாக நடக்கும் விஷயம்.

பலவகையில் வங்கிகள் கொடுத்த கடன்களில் அளவு வருடம் வருடம் கூடிகொண்டே செல்கிறது. வசூல் செய்ய முடியவில்லை என்பதை விட – வசூல் செய்ய பெரிய அளவில் அக்கரை காட்டுவது இல்லை வங்கிகள். முக்கியமாக பொதுத்துறை வங்கிகள். அதாவது அரசு வங்கிகள். இதை Non-Performing Assets (NPAs) என்கின்றனர். 2016ல் மோடி அரசு வெளியிட்ட புள்ளிவிவரம் காங்கிரஸ் ஆட்சியின் லட்சணத்தை பட்டவர்த்தனமாக காட்டியது. அந்த விதம் பல வழிகளில் Bad Loans என்ற இந்திய நாட்டில் உள்ள வங்கிகள் காட்டும் மதிப்பு மட்டும் சுமார் 8,00,000கோடி.

இதை செய்தது தனியார் வங்கிகளை விட நம்ம அரசு வங்கிகளான SBI, IOB , BOI ,UBI , PNB போன்றவை தான் பெரும் அட்டுழியம் செய்துள்ளன. Punjab National Bank (Rs. 55,000 கோடி) and Bank of India (Rs. 44,000 கோடி) என்று மிக மோசமாக கடன்களை அளித்துள்ளன. IDBI Bank எல்லாம திருத்தவே முடியாது. இது முழுக்க முழுக்க அரசு வங்கி அதிகாரிகள் துணையுடன் நடந்துள்ள கொள்ளை. ஆனால் சட்ட பூர்வமாக நடந்துள்ளது.  இதை வசூல் செய்வது ஒருபுறம் இருக்கட்டும். இந்த வங்கிகளை என்ன செய்வது???? இனி இது போல நடக்காது காப்பாற்ற என்ன செய்வது?????இது போல சென்றால் இந்த வங்கிகள் திவால் ஆவது உறுதி.

அதாவது நன்கு புரிந்து கொள்ளுங்கள் இந்த மோசமான கடன் கொடுக்கும் வேலையை அதிகம் செய்வது அரசு வங்கிகள் தான். தனியார் வந்கிகள் NPA gross advances வெறும் 2.70% மட்டுமே. ஆனால் அரசு வங்கிகள் NPA gross advances- 9.83%. (IDBI Bank  24.11 %,  Indian Overseas Bank 23.6% ; ICICI Bank மற்றும் Axis Bank இரண்டையும் சேர்த்தால் கூட்ட வெறும் 7% தான் NPA Ratio வரும்.  இந்த அரசு வங்கிகள திவால் ஆகும் நிலையை எட்டிவிட்டன என்று தான் கூறவேண்டும்.}

முக்கியமான விஷயம் :

உடனே இது 2014 மோடி ஆட்சிக்கு வந்தது தான் இவ்வளவு கூடிவிட்டது போல கிளப்புகிறார் ஒரு இஸ்லாமியர். அந்த நபர் ஒன்றை தந்திரமாக மறைக்கிறார்.. இது வாரகடன். அதாவது முன்பு கொடுத்த கடன் இனி வாங்க முடியாத அளவு சிக்கலில் நிற்கிறது என்று பொருள். அதாவது காங்கிரஸ் திமுக ஆட்சியில் கொடுத்த கூறுகெட்ட கடன் எல்லாம் – இப்போ வசூல் செய்ய முடியாத நிலையை எட்டியது- எனவே இது எல்லாம் இனி வசூல் செய்ய முடியாத நிலையில் இருக்கு என்று அர்த்தம்.  என்னவோ போன மாதம் மோடி கொடுத்துவிட்டு இந்த மாதம் அது வாராகடன் என்று அறிவித்தது போல பேச வெக்கம் இலையா? அவ்வளவு மோடி வெறுப்பு அவர் மனதில் வேறு ஒன்றும் சொல்வதற்கு இல்லை. நல்லவன் போல் நடிப்பது.}

சரி இப்படியே போனால் என்ன ஆகும்?????

கிரிஸ் நாடு போல் மொத்த நாடும் திவால் ஆகும். அப்படி ஆனால் மக்கள் சேமிப்பு முதல் எல்லாம் மதிப்பிழந்து போகும். மொத்த நாடும் பொருளாதரா சீரழிவை சந்திக்கும். ஏன் என்றால் கிரிஸ் எப்போ NPA Ratio 30% தாண்டியதோ – அன்றே நாடு திவால் ஆக போகிறது என்று தெரிந்துவிட்டது. இப்போ நம்ம நாட்டை இந்த பிரச்சனை கொடூரமாக வளர்ந்து வருகிறது… 2008ல் வெறும் 2.45% என்று இருந்த இந்த NPA Ratio 10.21% தாண்டி விட்டது…

இந்தியாவில் 38 வங்கிகளில் வாராகடன் மதிப்பு சுமார் ₹8,29,338 கோடி June 2017 வரை தகவல்படி. பொதுவான கணக்கு இந்த ரேசியோ 30% நெருங்கிவிட்டால் அந்த வங்கி பெரும் ஆபத்தில் உள்ளது – அதில் சேமித்த மக்களின் பணம் மிக பெரிய ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம். IOB எல்லாம் 25% வரை வந்துவிடார்கள். இன்னு 5%தான் மொத்தமா திவால் என்று அறிவிக்க வேண்டியது தான் பாக்கி. அவ்வளவு கேவலமாக அரசு ஊழியர்கள் வேலை நடக்கிறது.
 

எனவே ஒரு பக்கம் வராகடனை வசூல் செய்வது முக்கியம் என்றால் – இன்னொரு பக்கம் இனி இதுபோல நடக்காத வண்ணம் பாதுகாப்பான ஏற்பாடு செய்தாக வேண்டும். ஒரு நிமிடம் !!!! இந்த நடவடிக்கையை வரலாற்றில் முன்பு வந்த ஆட்சியாளர்கள் என்ன செய்தார்கள்?

2004-2005ல் விவாதம் ஆக்கி 2008வரையில் சரியான தீர்வு எட்டப்படவில்லை. ஆனால் 2009முதல் கடந்த இரண்டு முறை திமுக காங்கிரஸ் ஆட்சியில் வெறும் 70ஆயிரம் கோடி என்று இருந்த இந்த Bad Loans சுமார் 7லட்சம் கோடியாக ஏற்றிவிட்டு சென்றனர். இந்த காங்கிரஸ் திமுக கூட்டம் நிலகரி முதல் 2G வரை ஊழளில் இருந்து தப்பிக்கவே நேரம் இல்லை பாவம்- நேரம் எப்படி இருக்கும் இந்த விவகாரங்கள் விவாதிக்க!!!.

மோடி கடன் வசூல் வேலையை விரைவு படுத்தியுள்ளார்.

"Enforcement of Security Interest and Recovery of Debts Laws and Miscellaneous Provisions (Amendment) Bill, 2016" இதனை அடுத்து மட்டும் SARFAESI Act மூலம் சுமார் 64,519 வகை சொத்துகள் முடக்கபடுள்ளது.

அத்துடன் இந்தவிதம் நடந்து கொண்ட வங்கிகளை முறைபடுத்த விரும்புகிறார். SBI வங்கியுடன் இணைக்கும் வேலையை அறிவித்த உடன் அரசு ஊழியர்கள் போராட்டங்கள் நடக்கின்றன.. { வங்கி உள்ளாக இருக்கும் இந்த முதலைகள் புரளிகளை கிளப்பிவிடுகிறார்கள்.}    வங்கிகளை இணைக்க கூடாது என்று அதை எதிர்த்து நீதிமன்றம் செல்ல முடிகிறது!!!! உண்மையில் இந்தியாவில் வங்கிகள் – பொருளாதார குற்றங்கள் சார்ந்த விசயங்கள் மிக பெரிய குழப்பமான சட்டங்கள் அனைத்தையும் சீர்படுத்தாத வரை இந்த வங்கிகளை கட்டுக்குள் கொடுவர இயலாது. இந்த குற்றங்களை தடுப்பதும் கடினம்.

 
Financial Resolution and Deposit Insurance(FRDI) எங்கே வருகிறது???? என்ன தேவை????

மேற் சொன்ன காரணங்களில் வங்கிகள் அக்கரை இல்லாமல் செயலபட காரணம் என்னவென்றால் இந்த bail out.. அதாவது ஒரு நிறுவனம் இல்லை வங்கி தொடர்ந்து இயங்க முடியாத அளவு பொருளாதர சிக்கல் உருவானால் அரசு அதற்கு தேவையான நிதியை அதற்கு வழங்கி காப்பாற்ற முன் வரும்.

அதாவது சத்தியம் நிறுவனம் மிக பெரிய அளவு முறைகேட்டில் ஈடுபட்டது அதனை கைபற்றி National Company Law Tribunal (NCLT) அரசு அமைப்பு அந்த  கம்பெனி நிர்வாகிகளை நீக்கிவிட்டு மேற்கொண்டு அந்த நிறுவனம் இயங்குவதற்கு தேவையான நிதியை கொடுத்து இயக்கி பின்னர் அந்த நிறுவனத்தை டெக் மகேந்திராவுக்கு கைமாற்றியது..

காரணம்??? அரசு ஏன் இதை செய்ய வேண்டும்?? அந்த நிறுவனத்தில் 45000 ஊழியர்களை – நிறுவனத்தில் முதலீடு செய்த மக்களை காப்பாற்ற வேண்டி இதை அரசு செய்வது கடமை ஆகும். ஆனால் அதுவே வரி கட்டும் மக்களின் பணம் வீணடிக்கும் வேலையாக போய்விட கூடாது. அதாவது நம்ம விஜய் மல்லையா கேஸ் போல.

எனவே இந்த உதவி என்பது bail out… ஆனால் தனியார் நிறுவனங்கள் கிடையாதே இந்த IOB , BOI ,UBI , PNB போன்ற வங்கிகள் எனவே எந்த அக்கரையும் இல்லாத போனதால் இன்று பெரும் பிரச்சனையாக உருவாக்கி உள்ளன. அதனால் தான் இந்த வங்கிகள் bail out உதவுவதை தவீர்க்க முடிவு செய்யும்படி ஆணையம் பரிந்துரை செய்கிறது.

அதை விட்டுவிட்டு  bail in முறைக்கு கொண்டுவந்த சீர்திருத்தம் செய்வது தான் நாட்டுக்கும் நல்லது , மக்களுக்கும் நல்லது என்று பரிந்துரை செய்யபடுகிறது.

அது என்ன bail in???

எந்த நிதியும் வெளியில் இருந்து அளிக்கபடாது. அதற்கு பதிலாக அந்த அந்த வங்கிகள் – நிதி நிறுவனங்கள் சொத்துகளை கொண்டே மீட்க வழிவகை செய்யப்படும். இதனால் அந்த அந்த வங்கிகளுக்கு கொஞ்சம் பொறுப்பு வரும். உண்மையில் இந்த முறையில் எந்த விதம் அரசு திட்டத்தை உருவாக்கியுள்ளது என்று நமக்கு வரும் குளிர்கால கூட்ட தொடரில் தான் தெரியவரும்.  நோக்கம் இது தான் – வங்கி நடவடிக்கைகால் சீர்படுத்துவது.

இந்த bail in வச்சு தான் குழப்புகிறார்கள். உண்மையில் இதை நாம் தெளிவாக விவாதம் இப்போது செய்யவே முடியாது. இது ஒரு பொது விதி. ஆனால் இதை எப்படி நம் நாட்டுக்கு செயல்படுத்த போகிறார்கள் என்பது திட்டம் நாடாளுமன்றத்தில் விவாதம் வரும் போது தான் தெளிவாக தெரியும்.

அரசு இதை வங்கிகளை சீர்படுத்த வேண்டி தான் உருவாக்குகிறதே தவிர – வேறு காரணம் இல்லை என்று இப்போ புரிகிறதா??? இதனால் தான் 2நாள் முன்னர் பிரதமர் அவர்கள் வங்கிகள் மக்கள் முதலீடு கூடுதல் பாதுகாப்பு இதன் மூலம் நிச்சயம் கிடைக்கும் என்று.

"மக்கள் பாதுகாப்பு பணத்தினை எடுத்து தொழில்களில் – சேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வது போல புரளிகள் எல்லாம் சுத்த முட்டாள்தனமான பேச்சு. உங்கள் அனுமதி இல்லாமல் எப்படி உங்கள் பணத்தை முதலீடு செய்ய முடியும்??? அதை பார்த்துகொண்டு இருக்குமா நீதிமன்றம்?????".
 

சரி இதனால் வேறு என்ன லாபம் கிடைக்கும்???

எளிமையாக கூறவேண்டும் என்றால் கடன் கொடுப்பது வாங்குவதும் அரசுக்கும் மக்களுக்கும் இடையே ஒரு நேரமை வேண்டும். கடன் வாங்கினேன் கட்டினேன் என்று ஒரு சீரான நடவடிக்கை இருந்தால் ஒழிய – மேற்கொண்டு கடன் எளிதாக கொடுக்கவும் வட்டி குறைக்கவும் வழி அரசுக்கு கிடைக்கும்.

இப்போ அமெரிக்காவில் வீட்டு கடன் மீதான வட்டி எவ்வளவு ???? வெறும் 4% மட்டுமே.. இந்தியாவில் நிதி நிலைகளை சீர்செய்வதால் தான் இன்று சராசரியாக 8.5% அளவிற்கு வீட்டு கடன் கிடைக்க முடிகிறது. அது மட்டும் அல்ல சிறு குறு தொழில் செய்ய விரும்பும் பட்டதாரிகளுக்கு அதிகம் கடன் கொடுக்க முடியும் ஊக்குவிக்க முடியும்.

சும்மா கடன் வாங்குவேன் – ஆனால் கட்ட மாட்டேன் என்றால் அது பெரும் நிறுவனமாக இருத்தாலும் சரி – விவசாயி பின்னால் ஒளிந்து கொண்டு கடன் தள்ளுபடி கேட்கும் ஊர் நாட்டாமைகள் என்றாலும் சரி நாடுக்கு நல்லது கிடையாது.
 
அப்போ ஏன் பெரும் விசயமாக இது பரப்பபடுகிறது??????

நல்ல புரிந்து கொள்ளுங்கள் – இந்த சட்டம் சென்ற ஜூன் மாதம் கூடிய மக்களவை கூட்டத்திலேயே அங்கீகாரம் கொடுக்கபட்டுவிட்டது. முழுவடிவம் கொடுக்கும் பணி நடைபெறுகிறது. சரியா????  மனசாட்சி கொண்டு பேசுங்கள்…

உண்மையில் இன்று கிளப்பிவிடும் தி இந்து  போன்ற ஊடகங்கள் ஏன் இப்போ இதனை எடுத்து வெளியிட்டு மக்களை குழப்பவேண்டும்???? அதுவும் சரியாக குஜராத் தேர்தல் வோட்டு போடும் நாள் நெருங்கும் போது பெரிய விசயமாக ஏன் செய்தியை தி இந்து வெளியிட வேண்டும்???

Finance Ministry, the Reserve Bank of India (RBI), the Securities and Exchange Board of India (SEBI), the Insurance Regulatory and Development Authority of India (IRDAI), and the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) என்று அனைத்து முக்கிய அமைக்குகளில் இருந்தும் பிரதிநிதிகள் தேர்வு செய்து இந்த கமிட்டி உருவாக்கபட்டு சட்டம் கொண்டுவர தாயார் செய்யும் வேலை நடக்ககிறது – அது நாடாளுமன்றம் செல்லும் அங்கே விவாதம் நடக்கும். இன்னும் நிறைய வேலை இருக்கு. பின் தானே நடைமுறைக்கு வரும். இந்த நிலையில்  ஜூன் , ஜுலை , ஆகஸ்ட் , அக்டோபர் , நவம்பர் எல்லாம் கண்ணு தெரியாமல் இருந்த நம்ம தி இந்து பத்திரிக்கைக்கு அது என்ன டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 10க்கும் மேல் கட்டுரைகளை வெளியிடுகிறது?

பேசி இருந்தால் ஜூனில் பேசணும் – இல்லை திட்டம் சார்ந்து முழுமையாக விவாதம் செய்ய வேண்டும் என்றால் டிசம்பரில் திட்டம் நிறைவேற்றிய பின் அதில் உள்ள குறைகளை பேசலாம். ஆனால் அது என்ன குஜராத் தேர்தல் நேரம் கிளப்பனும்????
 
இறுதியாக :

இடதுசாரி ஊடகங்கள் தி இந்து விகடன் தொட்டு Frontline வரை ஒரு பெரும் கூட்டம் வேலை செய்ய – என்ன நேர்மை இருக்கும் இவர்களுக்கு????தி இந்து வழக்கமாக இதை செய்யும். இடதுசாரிகள் ஊடகங்கள் செய்யும் தந்திரம் இது. இதில் நான் வேறு சொல்ல காரணம் தேவை இல்லை.  அதை விட இந்த கிறிஸ்தவர் , இஸ்லாம் மக்கள் கண்மூடித்தனமாக மோடியை வெறுப்பது. அவர் என்ன செய்தாலும் தவறு ஏதாது நடக்காதா என்று கண்கொத்தி பாம்பாக திரிவதால் சின்ன செய்தி கூட – அதுவும் உறுதிபடுத்த படாத செய்தி கூட நல்லவே பரப்புகிறார்கள். காரணம் மனது முழுவதும் இருக்கும் வெறுப்பு!!!!

நாட்டில் ஒரு நடவடிக்கை என்பது மதம் ஜாதி தாண்டி கொஞ்சம் நல்லது கெட்டது என்று சிந்திக்க பழகுங்கள். மனதில் வெறுப்பை சுமர்ந்து கொண்டு நாட்டில் நல்லது நடக்க போராடுவது போல நடிக்காதீர். இங்கே அனைத்து போராட்டங்களும் உணர்வு நிலையில் தூண்டபடுவது சுத்த அயோக்கிய தனம். இதை விளக்கமாக கூறாமல் கஷ்டப்பட்டு சம்பாரிச்ச காசு எல்லாம் இனி போச்சு என்று வசனமாக ஏன் பரப்புகிறார்கள்???

நீங்கள் நேர்மையானவராக இருப்பீர் என்றால் இப்படி சிந்தியுங்கள்:

எதற்கு இந்த வேலை மோடி அவர்களுக்கு????? இதனால் அவருக்கு என்ன லாபம். இப்போ இருக்குறது போல இருந்துட்டு போகட்டுமே. எதற்கு மாற்ற செய்ய வேண்டும் எதற்கு கெட்ட பெயர் சம்பாரிக்க வேண்டும்??????

{உடனே கார்ப்பரேட் என்று ஆரம்பித்து விடாதீர். கம்யூனிஸ்ட் ஆளும் சீனா கூடா கார்ப்பரேட் எதிர்ப்பு என்ற முட்டாள்தனத்தை விட்டு aliexpress , Suning Commerce Group Co Ltd, Shandong Weiqiao Pioneering Group Co Ltd என்று ஆரம்பித்து இன்று Vivo, Xiaomi எல்லாம் அடுத்த நாட்டை பிடிக்க உதவும் அளவுக்கு அந்த கம்யூனிஸ்ட் அரசு மாறி உள்ளன. சும்மா இங்கே உட்காந்து கிறுக்கன் போல கம்யூனிசம் பேசாதே. அப்படி ஒரு நாடே இன்று உலகில் இல்லை}.

12ஆண்டுகள் மேல் முதல்வராக இருந்த மோடி அப்போ அடித்து சொத்து சேர்க்க தெரியாமல் குடும்பத்தை நடுத்தர குடும்பமாக விட்டு விட்டு – இன்று கார்ப்பரேட் முதலாளிகளுக்கு உதவி என்ன சம்பாரிகக் போகிறாரா என்ன?????

சிங்கபூர் போல் ஊடக சுதந்திரம் கட்டுபடுத்தபடவேண்டும்.

என்னை பொறுத்த வரை நீங்கள் வோட்டு போடுங்கள் போடாமல் போங்க. ஆனால் நாட்டில் நிர்வாகம் என்றால் என்ன என்று தேடி தெரிந்து கொள்ளுங்கள். அது நீங்கள் பார்க்கும் மிமீஸ் அல்ல…

-மாரிதாஸ்

Leave a Reply