நிதி முறை கேடுகளில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பமுடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார். 

11,000 கோடி ரூபாய் அளவுக்கு பஞ்சாப் நேஷனல் வங்கியில் நடந்த ஊழல் கடந்தவாரம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடி முதன் முறையாக தனது மவுனத்தை கலைத்துள்ளார். டெல்லியில் நேற்று நடைபெற்ற 4-வது உலகவர்த்தக மாநாடு நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், முந்தைய குடும்ப ஆட்சியில் வங்கிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்துவந்தன என்றார். தற்போதைய அரசு கடந்த 3 மாதங்களில், வங்கிகள்தொடர்பான 2,700-க்கும் மேற்பட்ட வழக்குகளை  முடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், மக்களின் வரிப்பணத்தை முறைகேடாக பயன்படுத்தி ஊழலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் தண்டனையில் இருந்து தப்பிக்கமுடியாது என்றும் மோடி எச்சரித்தார்.

Leave a Reply