பிகாரில் நிதீஷ்குமாரும், லாலு பிரசாதும் 25 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர். இதுவரை பெண்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள் .

சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்களின் நலனை கருத்தில்கொண்டு, சட்டமேதை அம்பேத்கர் வகுத்தளித்த இட ஒதுக்கீட்டு முறையை ரத்துசெய்ய வேண்டும் என இதுவரை ஆட்சியில் இருந்த எந்தவொரு அரசியல்கட்சியும் நினைத்ததில்லை.

ஆனால், கடந்த 2005ம் ஆண்டு ஜூலை 23, 24 ஆகிய தினங்களில், நிதீஷ்குமாரும், லாலு பிரசாதும், மத அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு ஏதுவாக, தற்போதுள்ள இடஒதுக்கீட்டு கொள்கையை மறு ஆய்வுசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.

கல்வியறிவுக்கு பெயர் பெற்ற நாளந்தா பல்கலைக் கழகம் உள்ள இந்தமாநிலத்தில், பெண்கள், தங்கள் கையெழுத்துக்கு பதிலாக, கைரேகை யிட்டு எனக்கு நினைவு பரிசளித்தனர். பெண்கள் எழுத்தறிவு இல்லாமல் இருப்பது வேதனையளிக்கிறது.

இந்தமாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 35 ஆண்டுகள் ஆட்சிசெய்தார். நிதீஷ் குமாரும், லாலு பிரசாதும் 25 ஆண்டுகள் ஆட்சிசெய்தனர். இதுவரை பெண்களுக்காக அவர்கள் என்ன செய்தார்கள்? இதுவே அவர்களின் தோல்விக்கு நிரூபணமாகும்.

இந்தமாநிலத்தை ஜனநாயகப் பாதையில் முன்னெடுத்து செல்வதற்கு நாங்கள் விரும்புகிறோம். பிகார் மாநிலத்தில் விரைவான முன்னேற்றம் ஏற்படுவதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிமலர வேண்டும் .

பீகாரில் 5-ம் கட்ட சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, மதுபானி, காத்திஹார் ஆகிய இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசியது

Leave a Reply