கர்நாடகாவில் வெள்ள நிலவர ஆய்வின்போது அம்மாநில அமைச்சரை கடிந்துகொள்ளும் வகையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடந்துகொண்டதாக விமர்சனங்கள் வெளியாகின. இந்நிலையில் அச்சம்பவம் குறித்து மத்திய அரசுத்தரப்பில் விளக்கம் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவில் ஏற்பட்டுள்ள வெள்ளம் நிலவர ஆய்வின்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதா ராமன், அம்மாநில அமைச்சரை கடிந்து கொள்ளும் வகையில் நடந்ததாக நேற்று விமர்சனம் எழுந்தது. 

இந்நிலையில் அதுகுறித்து மத்திய அரசுசார்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்,
குடகு மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் விசாரித்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது மாநில அமைச்சர் ரமேஷ் இடையில் குறுக்கிட்டு அதிகாரிகள்கூட்டத்தில் பங்கேற்க அழைத்ததாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவத்தினரின் குறைகளை அறிவது தமதுகடமை என்றும், அந்தச்சந்திப்பு தமது நிகழ்ச்சி நிரலில் இடம் பெற்றிருப்பதாகவும் மத்திய அமைச்சர் எடுத்துக்கூறிய போதும், அந்தச் சந்திப்பை உடனடியாக நிறுத்த மாநில அமைச்சர் நிர்பந்தித்ததாக அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

இதையடுத்து நிலைமை மோசமடைவதை தவிர்க்கும் வகையில் மத்திய அமைச்சர் தனதுசந்திப்பை நிறுத்தி வைத்து விட்டு அதிகாரிகள் கூட்டத்திற்கு சென்றதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அந்தகூட்டத்தில் பத்திரிகையாளர்களும் இருந்ததாகவும் இதுவழக்கத்திற்கு மாறானது என்றும் அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது. 

மாநில அமைச்சரின் இச்செயல் எதிர்பாராதது என்றும் மேலும் மத்திய அமைச்சரை பற்றி அவர் தரக்குறைவாக சிலவார்த்தைகளை பேசியதாகவும் இது மாநிலங்களவையின் மாண்புக்கே இழுக்கு என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதுதவிர மத்திய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பின் போது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் பாதுகாப்பு அமைச்சகம் என்ற குடும்பத்தின் ஓர் அங்கம் என்பதை குறிக்கும் வகையில் பரிவார் என்ற வார்த்தையை பயன் படுத்தியதாகவும் ஆனால் அதுவும் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும் அரசின் விளக்கத்தில் கூறப்பட்டுள்ளது.

 

Leave a Reply