#உண்மை #என்ன?

நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை,அதனால் எனக்கு வெங்காய விலை குறித்து கவலையில்லை என் சர்ச்சைக்குரிய வகையில் மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் பேசியதாக திரித்துக் கூறப்படுகிறது.

வெங்காய விலையை மையமாக வைத்தும் அது குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தெரிவித்த ஒரு கருத்தும் சர்ச்சையாகி இருக்கிறது.

அதாவது வெங்காய விலை குறித்த விவாதத்தில் நேற்று பேசிய நிர்மலா சீதாராமன் “நாங்கள் எங்கள் குடும்பத்தில் வெங்காயத்தை அதிகம் எடுத்துக்கொள்வதில்லை,எனவே அது பற்றி எனக்கு கவலையில்லை என்று கூறியதாக வலம் வரும் ஒரு செய்தி சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

நிர்மலா சீதாராமன் உண்மையில் அந்த கருத்தை தெரிவித்தாரா என்றால் ஆம் அவர் அந்த கருத்தை தெரிவித்தார்.ஆனால் அவர் அந்த கருத்தை தெரிவித்த சூழ்நிலையும் தெரிவித்த நபரும் தெரிவித்ததற்கான காரணமும் வேறு.

நேற்று வெங்காய விலை உயர்வு குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றது.அதில் பலவேறு கட்சி உறுப்பினர்களின் பேச்சுக்கும் பதில் தெரிவித்து கடந்த ஓராண்டில் வெங்காய விலையை கட்டுப்படுத்த அரசின் சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும்,வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை பற்றியும் சுமார் 20 நிமிடங்கள் உரையாற்றிய அவர் வெங்காய தேவையை ஈடு செய்ய துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இதற்கிடையில் நிர்மலா சீதாராமன் பதில் அளித்துக் கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சியை சேர்ந்த உறுப்ப்பினர்கள் அடிக்கடி எழுந்து நிர்மலா சீதாராமனின் பேச்சை இடைமறித்து தங்களின் கருத்தை தெரிவித்த வண்ணம் இருந்தனர்.

எகிப்து நாட்டில் இருந்து வெங்காய இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நிர்மலா சீதாராமன் கூறியதும் இடைமறித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே இந்தியர்கள் ஏன் இத்தாலிய வெங்காயத்தை உண்ண வேண்டும் என்று கேள்வி எழுப்பியதோடு இந்தியாவில் வெங்காய உற்பத்தி குறைந்ததற்கு காரணம் என்ன என்றும் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு நிர்மலா சீதாராமன் பதில் அளித்து கொண்டிருக்கும் போதே எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த உறுப்பினர் ஒருவர் எழுந்து நக்கலடிக்கும் விதமாக அந்த எகிப்து நாட்டு வெங்காயத்தை நீங்கள் எப்போதாவது சாப்பிட்டு இருக்கிறீர்களா என்று கேள்வி எழுப்பினார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன் நான் வெங்காயம் பூண்டு போன்றவாற்றை அதிகம் உண்பதில்லை.அதனால் நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.

இப்படி ஒரு நீண்ட விவாதமே நடந்திருக்க ஒரு சிலர் அவர் பேச்சில் இருந்து அந்த குறிப்பிட 16 செகண்ட் வீடியோவை மட்டும் எடுத்துப்போட்டு அவர் வெங்காய விலை பற்றி கவலையில்லை என்று அகம்பாவமாக பேசியதாக சர்ச்சையாக்கி இருக்கின்றனர்…

 

Comments are closed.