வரும் 2020ம் ஆண்டுக்குள் அனை வருக்கும் வீடு திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவது இன்றிய மையாதது. எனவே, நிலம் கையகப் படுத்தும் மசோதா நிறைவேறவேண்டிய அவசியத்தை நாடாளுமன்ற  உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்’’ என மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிலம் கையகப் படுத்தும் மசோதாவில், அடுத்துவந்த பாஜக அரசு பலதிருத்தங்கள் மேற்கொண்டது. இதற்கு எதிர்ப்புதெரிவித்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், ‘விவசாயிகளுக்கு எதிரானது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமானது’, என குற்றம்சாட்டினர். நான்குமுறை அவசர சட்டம் பிறப்பித்த பிறகும்,இந்தமசோதா நாடாளுமன்றத்தில் இழுபறியாகவே உள்ளது. எனவே மாற்றுவழியில் மசோதாவை நிறைவேற்ற கருதிய அரசு, இதுதொடர்பாக நாடாளுமன்ற கூட்டு குழுவுக்கு கடந்த ஆகஸ்டில் பரிந்துரைசெய்தது.

இந்த நிலையில், ரியல்எஸ்டேட் மசோதாவை மக்களவையில் நேற்று தாக்கல்செய்த பின்னர், நிலம் கையகப்படுத்தும் மசோதா பற்றி ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியதாவது: நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் முடிவு எடுக்கவேண்டிய நிர்ப்பந்தம் அரசுக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளும் இந்தவிவகாரத்தில் புரிந்து கொள்ளுதலை கடைபிடித்து மசோதா விரைவில் நிறைவேற ஒத்துழைக்க வேண்டும்.  ஏழைகளுக்கு வீடு கட்டி தருவதற்காகவே நிலம் கையகம்செய்ய வேண்டி உள்ளது. ரியல் எஸ்டேட் மசோதாவில் வீடு வாங்குபவர் களுக்குத்தான் சாதகமான அம்சங்கள் உள்ளது. வீட்டுவசதி துறைக்கு அவசியம் தேவைப்படும் இந்தமசோதவை மீறி, முறைகேடுகளில் ஈடுபடும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் 3 ஆண்டு சிறைதண்டனை அனுபவிக்க நேரிடும். இடைத்தரகர்கள் ஒரு ஆண்டு சிறைவாசம் செல்வார்கள். இவ்வாறு நாயுடு பேசினார்.

Leave a Reply