இந்திய விண்வெளி ஆராய்ச்சிமையமான இஸ்ரோவின் சந்திரயான் 2 தற்போது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப் பட்டுள்ளது. இன்னும் 48 நாட்களில் சந்திரயான் 2 சரியாக நிலவின் தென் பகுதியை அடையும்.

யாரும் இது வரை நினைத்து கூட பார்க்காத நிலவின் தென்துருவத்தை இந்தியா இன்னும் சில நாட்களில் தொடபோகிறது.

சந்திரயான் 2 மற்றும் ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டையும்சேர்த்து 960 கோடி செலவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2 வருடங்களில் மிககடுமையான உழைப்பை போட்டு சந்திரயான் 2வை இஸ்ரோ விஞ்ஞானிகள் உருவாக்கி இருக்கிறார்கள்.

இஸ்ரோ கடந்த 2008ம் ஆண்டு அக்டோபர் 22ம் தேதி, முதன் முதலாக நிலவை ஆய்வு செய்ய  சந்திராயன்-1 விண்கலத்தை விண்ணுக்கு அனுப்பியது. நிலவின் வடதுருவத்தில் தரையிறங்கி 312 நாள்கள் ஆய்வைமேற்கொண்ட இந்தவிண்கலம், நிலவின் பரப்பில் பனிக்கட்டி வடிவில் தண்ணீர் இருப்பதை உறுதிப்படுத்தி உலகநாடுகளின் கவனத்தை ஈர்த்தது. மேலும், மெக்னீசியம், அலுமினியம், சிலிக்கான் போன்ற தாதுக்களும் நிலவின் பரப்பில் படிமங்களாக இருப்பதையும்  கண்டறிந்தது.இந்த சந்திராயன் விண்கலம் பி.எஸ்.எல்.வி.-சி11 ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.

முன்னதாக ஜூலை 15 ம் தேதி அதிகாலை விண்ணில் செலுத்த திட்டமிடப்பட்டிருந்த சந்திரயான் 2 விண்கலம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, புறப்படுவதற்கு 56 நிமிடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஏறக்குறைய ஒன்றரை ஆண்டு கால உழைப்பிற்கு பிறகு நிலவின் தென்துருவ பகுதிகளை ஆய்வு செய்ய சந்தியரான் 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.

3.8 டன் எடையுள்ள சந்திராயன் – 2 விண்கலத்தை கிரயோசனிக் எஞ்சின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் சுமந்து செல்வதால் இந்த ராக்கெட்டுக்கு பாகுபாலி என்று செல்லப் பெயரை பெற்றது.

இந்த  ராக்கெட் 43.3 மீட்டர் உயரமும்  640 டன் எடையும்  கொண்டது. இதன்  முதல் நிலையில் திட எரிபொருளையும் , 2-ம் நிலையில் திரவ எரிபொருளையும் கொண்டது. . இதில்  நிலவை சுற்றி ஆய்வு செய்வதற்காக ‘ஆர்பிட்டர்’ என்ற சாதனம், நிலவில் தரையிறங்கி ஆய்வு செய்ய ‘லேண்டர்’ என்ற சாதனம், நிலவின் தரையில் ஊர்ந்து சென்று ஆய்வு செய்ய ‘ரோவர்’ என்ற சாதனம் என 3 சாதனங்கள் சந்திராயன் -2ல் இடம்பெற்றுள்ளன.இந்த 3 சாதனங்களிலும் அதிநவீன கேமராக்கள், எக்ஸ்ரே கருவிகள், வெப்பநிலையை ஆய்வு செய்யும் கருவிகள், லேசர் தொழில்நுட்பத்தில் செயல்படும் கருவிகள் என 13 வகையான கருவிகள் இணைக்கப்பட்டிருந்தன.

இதில் ஆர்பிட்டர் 2,379 கிலோ எடையும், லேண்டர் 1,471 கிலோ எடையும், ரோவர் 27 கிலோ எடையும் கொண்டது

புறப்பட்ட சுமார் 16 நிமிடம் 24 வினாடிகளில் விண்கலத்தை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் திட்டமிட்டபடி குறிப்பிட்ட இலக்கில் வெற்றிகரமாக கொண்டு சேர்த்தது. இந்த பயணத்தில் முதல் இரண்டு நிலைகள் எரிந்து முடிந்ததும், மூன்றாவது நிலையில் பொருத்தப்பட்டு இருந்த என்ஜின் வெற்றிகரமாக இயக்கப்பட்டு விண்கலத்தை விண்வெளியில் குறிப்பிட்ட உயரத்துக்கு கொண்டுசென்று பூமியின் சுற்று வட்டப்பாதையில் நிலைநிறுத்தியது. அதையடுத்து, பெங்களூருவில் உள்ள தரைகட்டுப்பாட்டு நிலையம், விண்கலத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

 

சந்திரயான் 2ல் இருக்கும் எஞ்சின்கள் செயல்பட தொடங்கியதும், அதில் இருந்து வரும் உந்து சக்தி மூலம் நிலவை நோக்கி சந்திரயான் 2 நகரும். நிலவு பூமியை சுற்ற கூடியது. இதனால் நிலவிற்கு ஏற்றபடி சந்திரயான் 2 அடிக்கடி திசையை மாற்ற வேண்டி இருக்கும். இதனால் நிலவு நகரும் இடத்தை நோக்கி சந்திரயான் கொஞ்சம் கொஞ்சமாக திசை மாறி மாறி செல்லும். நிலவை நோக்கி 48 நாட்கள் நெடும் பயணத்தை சந்திரயான் 2 செய்ய இருக்கிறது.  செப்டம்பர் 6ம் தேதி நிலவின் சுற்று வட்டப்பாதையை சந்திரயான் 2 அடையும். சந்திரயான் 2 நிலவின் சுற்று வட்டப்பாதையில் நுழைந்தவுடன் வேகமாக நிலவின் ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்படும். இதனால் சந்திரயான் 2விற்கு எதிர் உந்துவிசையை அளிக்க எதிர்புறத்தில் சில திரஸ்டர் எஞ்சின்கள் இருக்கும். இது எதிர் திசையில் எஞ்சினை இயக்கி சந்திரயான் 2வின் வேகத்தைகுறைக்கும். இதனால் விபத்து தவிர்க்கப்படும்.

சந்திரயான் 2ல் உள்ள ஆர்பிட்டார் எனப்படும் ஆராய்ச்சி செயற்கைகோள் நேரடியாக நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும்.  விக்ரம் என்ற லேண்டர் கீழே இறங்கும். இது பாராசூட் மற்றும் எதிர் எஞ்சின்கள் மூலம் வேகம் குறைக்கப்படும்.  செப்டம்பர் 7ம் தேதி சரியாக விக்ரம் லேண்டரில் உள்ள பிரக்யான் ரோவர் வெளியே வந்து ஆராய்ச்சிகளை செய்யும்.

நிலவின் மேற்பரப்பு வரைபடம், தாதுக்கள், வேதியியல் கலவை, நிலவின் மேற்பரப்புக்கு மேலே உள்ள சிதறிய நீர் மூலக்கூறுகள் மற்றும் பாறை வடிவங்கள் உள்ளிட்ட பல்வேறு சோதனைகளை மேற்கொள்ள இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

நிலவின் தென் துருவத்தில் பலமில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பாறைகள் உள்ளன. இவற்றை எந்த நாடும் இதுவரை ஆய்வு செய்ததில்லை. இதனை ஆய்வு செய்வதன் மூலம் உலகம் எப்போது தோன்றியது என்பது போன்ற தகவல்கள் தெரியவரும். மேலும் கனிம மற்றும் நீர் எதிர்பார்ப்பு சோதனைகளையும் சந்திரயான்-2 விண்கலம் மேற்கொள்ள இருக்கிறது.

லேண்டர் மற்றும் ரோவரின் ஆய்வுப்பணி சில நாட்களில் முடிந்துவிடும். அதே நேரத்தில் ஆர்பிட்டர் ஓராண்டு வரை பணியை தொடரும். ரோவர், சூரியசக்தி தகடுகள் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை பயன்படுத்தி, 500 மீட்டர் தூரம் வரை பயணம் செய்து ஆய்வு செய்யும். ஆர்பிட்டர் மற்றும் லேண்டர் நேரடியாக பூமியுடன் தொடர்பு கொள்ள முடியும்.

லேண்டர், ரோவர் நிலவில் தரை இறங்கும் கடைசி 15 நிமிடம் திகிலான நேரமாக இருக்கும். இந்திய தேசிய கொடி விண்வெளி துறையில் உயரத்தில் பறக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

முதல் முறையாக நிலவின் தென்துருவம் பகுதியில் ஆய்வு நடத்தும் நோக்கத்தில் சந்திராயன்-2 விண்கலம் செலுத்தப்பட இருந்ததால், உலக நாடுகள் அனைத்துமே இந்த மிஷனை உற்று நோக்கின. இந்நிலையில்தான்

Comments are closed.