பிரதமர் நரேந்திரமோடி, நிவர்புயல் நிலவரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோருடன்பேசினார்.

பிரதமர் பகிர்ந்துள்ள டுவிட்டர் பதிவில், “நிவர்புயல் தொடர்பான நிலவரம் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி ஆகியோரிடம் பேசினேன். மத்திய அரசு அனைத்து உதவிகளையும்செய்யும் என்று உறுதி அளித்தேன். பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்காக நான்பிரார்த்திக்கிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Comments are closed.