இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனம் (இஸ்ரோ) செயற்கை கோள்களையும், அவற்றை விண்ணில் ஏவுவதற்காக பிஎஸ்எல்வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகளையும் தயாரித்துவருகிறது. தற்போது 712 கிலோ எடை கொண்ட 7–வது கார்ட்டோசாட்–2இ என்ற செயற்கை கோள் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
 
பி.எஸ்.எல்.வி. சி–38 ராக்கெட் மூலம் ‘கார்ட்டோசாட்– 2இ’ செயற்கை கோளை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.29 மணிக்கு சென்னைக்கு அருகே உள்ள ஆந்திரமாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப் பட்டது.
 
அமெரிக்கா  உள்ளிட்ட 14 வெளிநாடுகளைச் சேர்ந்த 29 செயற்கைகோள்களுடன் மொத்தம் 243 கிலோ எடைகொண்ட 31 செயற்கை கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டது. இந்த செயற்கைகோள்கள் அனைத்தும் வெற்றிகரமாக சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. 
 
செயற்கை கோள்களை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர்பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:- “ 15 நாடுகளின் 31 செயற்கை கோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் எங்களை பெருமைப்பட செய்துள்ளீர்கள்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply