அரசியலில் ஒருவருக்கொருவர் எதிரும் புதிருமாக விளங்கும், பிரதமர் நரேந்திர மோடி மற்றும், மேற்கு வங்க முதல்வர் மமதாபானர்ஜி இருவரும், கொல்கத்தாவில் இன்று நேருக்கு நேர் சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடியை , முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் சந்தித்தார். இந்தசந்திப்பு மற்றும் ஆலோசனைக்கு பிறகு, நிருபர்களிடம் மமதா பானர்ஜி கூறுகையில், “மேற்குவங்கத்தில் உள்ள மக்கள் என்.ஆர்.சி (குடிமக்களின் தேசிய பதிவு) மற்றும் தேசியகுடியுரிமை சட்டத் திருத்தம் (சி.ஏ.ஏ) ஆகியவற்றை ஏற்கவில்லை என்று நான் பிரதமரிடம் தெரிவித்தேன். நீங்கள் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கூறினேன். ஆனால், பிரதமர், நான் அரசு திட்டங்களுக்காக இங்கேவந்து இருக்கிறேன், எனவே நீங்கள் டெல்லிக்கு வாங்க. விவாதிப்போம் என்று அவர் கூறினார்” இவ்வாறு மமதா தெரிவித்தார்.

Comments are closed.