தமிழகத்தில் நீட்தேர்வு முடிவுகள் வேதனை அளிப்பதாக உள்ளது என்று பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மருத்துவப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவுத்தேர்வு ( நீட் தேர்வு ) முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதில் முதல் 25 இடங்களில் தமிழகத்தை சேர்ந்த எந்த ஒருமாணவ மாணவியும் இடம்பெறவில்லை.

இதுகுறித்து தமிழக பாஜக தலைவரும், மத்திய இணை அமைச்சருமான பொன் ராதாகிருஷ்ணன் கூறும்போது, "தமிழகத்தின் நீட்தேர்வு முடிவுகள் மிகவும்வேதனை அளிக்கிறது. நீட்தேர்வு முடிவுகளுக்கு நான் மாணவர்களை குற்றம்சொல்ல விரும்பவில்லை. ஆசிரியர்கள் தான் இந்த முடிவுகளுக்கு காரணம்.

பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும். நீட்தேர்வு முடிவுகள் நமக்கு நல்லபாடத்தை அளித்துள்ளன" என்றார்.

Leave a Reply