'நீட்' எனப்படும், மருத்துவ நுழைவுதேர்வை, ஆண்டுக்கு 2 முறை, 'ஆன்லைனில்' நடத்தும் முடிவை, மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை கைவிட்டுள்ளது.

'ஆண்டுக்கு இருமுறை தேர்வு நடத்துவதால்,மாணவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும்' என, மனிதவள மேம்பாட்டு துறைக்கு, சுகாதார அமைச்சகம் கடிதம் எழுதியது. 'ஆன்லைனில் தேர்வு நடத்துவதால், கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்' என்றும், சுகாதார அமைச்சகம் கவலை தெரிவித்தது.

இதையடுத்து, இறுதிமுடிவு செய்யப்படாத தேர்வு அட்டவணையை, மனிதவள மேம்பாட்டு துறை, சமீபத்தில் வெளியிட்டது. அந்த பட்டியல் அடிப்படை யில், 2019, மே மாதம், என்.டி.ஏ.,வால் நடத்தப்படும் தேர்வுகளின் இறுதிபட்டியலை, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டது. இதன் படி, ஆண்டுக்கு இரு முறை,

ஆன்லைனில் தேர்வுநடத்தும் முடிவு கைவிடபட்டுள்ளது. புதிய அட்டவணைப்படி, 2019, மே, 5ல், 'நீட்' தேர்வு நடக்கவுள்ளது.

Leave a Reply