நீர்வழியில் கடல் விமானங்களையும் சாலைகளில் எலக்ட்ரிக் வாகனங்களையும் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.

கடல் விமானப் போக்கு வரத்தை தொடங்கும் போதே 10 ஆயிரம் கடல் விமானங்களுடன் தொடங்குவதற்கான திறனை இந்தியா பெற்றிருக்கிறது . சாலை போக்குவரத்தை பெட்ரோல் மற்றும் டீசல்வாகனங்களில் இருந்து படிப்படியாக எலக்ட்ரிக், எத்தனால், மெத்தனால், பயோ டீசல் வாகனங்களுக்கு மாற்ற திட்டமிட்டிருப்பதாகவும் நிதின்கட்கரி தெரிவித்தார்.

இது தொடர்பான ஆயிரம் புதிய தொழிற்சாலைகள் தொடங்கப்படும் எனவும் அதில் 50 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார். எலக்ட்ரிக் பேருந்துகளைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளதாகவும், அதன் மூலம் 30லிருந்து 35 சதவீதம் பயண சீட்டுக் கட்டணம் குறையும் எனவும் கட்கரி கூறினார். எலக்ட்ரிக் பேருந்துகள் ஒருமுறை மின்னூட்டம் செய்தால் அது 36 கிலோ மீட்டர் வரையில் பயணம் செய்யும் எனவும், அதன் பிறகு மீண்டும் மூன்றே நிமிடத்தில் மின்னூட்டம் செய்துவிட முடியும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply