இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கி நாட்டின் சுதந்திரத் திற்காக போராடிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், 1943 ஆண்டு அக்டோபர் மாதம் 21ந்தேதி, சிங்கப்பூரில் ஆசாத் இந்த் என்ற சுதந்திர இந்திய அரசு என்ற பிரகடனத்தை வெளியிட்டார். அதன் 75-வது ஆண்டை நினைவு கூறும் வகையில், டெல்லி செங்கோட்டையில், பிரதமர் மோடி தேசியகொடியை ஏற்றினார். சுதந்திர இந்திய வரலாற்றில், அக்டோபர் மாதத்தில் செங்கோட்டையில் பிரதமர் கொடியேற்றுவது என்பது இது முதல் முறை ஆகும். வழக்கமாக சுதந்திரதினத்தில் மட்டுமே செங்கோட்டையில்  தேசிய கொடியை ஏற்றிவைத்து, பிரதமர் நாட்டுமக்களுக்கு உரையாற்றுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அவர் பேசியதாவது கடந்த 4 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்த பாஜக அரசு அதிகம் உழைத்துள்ளது , சர்ஜிகல் ஸ்ட்ரைக் போன்ற கடுமையான முடிவுகளை எடுக்கும்சக்தி இந்த அரசுக்கு உள்ளது .

, நேதாஜி அனைத்து மக்களுக்கும் சம உரிமை மற்றும் சம வாய்ப்பு அளிக்கப்படும் என உறுதிகொண்டு இருந்தார். நாட்டில் பிரித்தாளும் கொள்கையை ஒழிக்க அவர் விரும்பினார் , ஆனால் அவரதுகனவு இன்று வரை நிறைவேற்றப்பட வில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply