பிரதமர் நரேந்திரமோடி ஜானக்பூரில் இருந்து காத்மாண்டு வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக நேபாளம் சென்றுள்ளார்

இதைமுன்னிட்டு மோடி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

நேபாளத்துடனான இந்திய உறவு மிகவும் பழமையானதும் மிக நெருக்க மானதாகவும் இருந்து வருகிறது. நான் பிரதமராகப் பதவியேற்ற பிறகு இது வரை 2 முறை நேபாளத்துக்கு சென்றுள்ளேன். தற்போது மேற்கொள்ளும்பயணம் 3-வதாக உள்ளது. இதுவே நேபாளத்துக்கு இந்தியா அதிகமுன்னுரிமை அளிப்பதை எடுத்துக் காட்டும்.

அண்டை நாடுகளுக்குதான் முதல் முன்னுரிமை என்றகொள்கையை எனது தலைமையிலான மத்திய அரசு கடைபிடிக்கிறது என்பதை இது வெளிப் படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளாக இருநாடுகளும் இணைந்து பல்வேறு திட்டங்களை முடித்து காட்டியுள்ளன. இருநாட்டு மக்களும் பலனடையும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளன.

என்னுடைய நேபாளபயணம் அந்நாட்டுடனான உறவை இன்னும் வலிமைப் படுத்தும் என்று நம்புகிறன். இவ்வாறு மோடி கூறினார்.

Leave a Reply