முடிவுகளை விரைந்து எடுக்கவேண்டும்; நேர்மையான, நல்ல நோக்கத்துடன் கூடிய முடிவுக்கு அரசு ஆதரவு அளிக்கும்,'' என, அதிகாரிகளுக்கு,பிரதமர் நரேந்திரமோடி அறிவுறுத்தி உள்ளார்.


மத்திய அரசின் பல்வேறுதுறைகளில் பணியாற்றும், 70 கூடுதல் செயலர்கள், இணைச் செயலர்களுடன், பிரதமர் நரேந்திரமோடி, நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இந்தகூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் மிகவும் பின் தங்கியுள்ள,100 மாவட்டங் களை தேர்ந்தெடுத்து, அவற்றை மேம்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்; அப்போதுதான், பல்வேறு வளர்ச்சி திட்டங்களில், தேசிய அளவில், ஒரேமுறையில் செயல்படமுடியும்.

வளர்ச்சியோடு, சிறந்தநிர்வாகமும் இணைந்தால், மக்களுக்கு வசதிகள் கிடைப்பதுடன், திருப்தியும் ஏற்படும்; இதற்கு அனைத்து துறைகளும், ஒருங்கிணைந்து,ஒரேசிந்தனையுடன் செயல்பட வேண்டும்.

துறைகளுக்குள் நல்லதகவல் பரிமாற்றம் இருக்க வேண்டும்.நாட்டுமக்களின் நலனைக் கருத்தில் வைத்து,ஒவ்வொரு அதிகாரியும் செயல்படவேண்டும். மக்களுக்கு சேவைசெய்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது. மக்கள் நலத்திட்டங்களில், மிகவும் விரைவாகவும், திறமையான முறையிலும் முடிவுகளை எடுக்க வேண்டும்.

நேர்மை உடனும், நல்ல நோக்கத்துடனும் எடுக்கப்படும் முடிவுகளுக்கு, மத்திய அரசு துணையாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.பல்வேறு அரசு திட்டங்களின் செயல்பாடுகள், அதை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளையும், அதிகாரிகளிடம் மோடி கேட்டறிந்தார்.

Leave a Reply